Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 22-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

அலுவலகத்தில் நீங்கள் வேலை செய்யும் மேசைக்கு அருகே மஞ்சள் நிற பூக்களை வையுங்கள். இன்றைய தினம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும். சொத்துக்களை விற்று பணம் சம்பாதிக்க சிறந்த நாள். விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற ஏற்ற நாள். கருவிகள், இயந்திரங்கள், டிராவல் ஏஜென்சிகள், தளபாடங்கள், புத்தகங்கள், மருந்துகள், கவர்ச்சி மற்றும் ஆடைகள் ஆகியவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் விமானிகளுக்கு தங்களது தலைமை பண்பிற்காக பாராட்டப்படுவார்கள். குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
நன்கொடை: பிச்சைக்காரர்களுக்கு குங்குமப்பூவில் செய்த இனிப்புகளை வழங்குங்கள்

#எண் 2: (நீங்கள் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. சட்டப் பிரச்சனைகள் விரைவில் சுமூகமாக நிறைவேறும். உங்கள் மரியாதையை கெடுக்கக்கூடிய நபரை நீங்கள் சந்திப்பீர்கள், எனவே கவனமாக இருங்கள்.பெண்கள் கூட்டாளிகளின் உன்னிப்பான தன்மையை புறக்கணிக்க வேண்டும். பழைய நட்பை பயன்படுத்தி அரசு ஒப்பந்தங்களை பெற வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் மற்றும் அரசியல்வாதிகள் வெற்றி பெற ஏற்ற நாள்.

அதிர்ஷ்டமான நிறம்: நீல வானம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: கோவிலில் வெள்ளை நிற இனிப்புகளை தானம் செய்யுங்கள்.

#எண் 3: (நீங்கள் 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சிறந்த உறவை உருவாக்க, உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள். நடிப்புத் திறனை வெளிப்படுத்த நடிகர்களுக்கு சிறப்பான நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் அதிக லாபம் தரும். காதலை வெளிப்படுத்த சிறந்த நாள். அரசு அதிகாரிகள் சுற்றுப்புறத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் அணிய மறக்காதீர்கள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
நன்கொடை: பெண் உதவியாளருக்கு துளசி செடியை தானம் செய்யுங்கள்

#எண் 4: (நீங்கள் 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். இன்றைய தினம் சிறப்பாக உள்ளதால் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது வெற்றி பெற உதவும். உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சொத்துக்களை வாங்க சிறந்த நாள். குறிப்பாக அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சாதகமான நாளாகும். மருத்துவம், மென்பொருள், கைவினைப் பொருட்கள், உலோகத் துறையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் தங்கள் டார்கெட்டை அடைய வாய்ப்புள்ளது. சைவ உணவு மற்றும் தியானத்தை பின்பற்றவும்.

அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: வீட்டு வேலை செய்பவருக்கு துடைப்பத்தை தானமாக கொடுங்கள்

#எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்கள் உணர்வுகள் மற்றும் செயல்கள் நீங்கள் எப்படிப்பட்ட லட்சியவாதி, கடின உழைப்பாளி என்பதை பிரதிபலிப்பதால், உச்சம் தொடும் புகழை எட்ட வாய்ப்புள்ளது. பணியிடம், வியாபாரம் என அனைத்திலும் அங்கீகாரம் மற்றும் நன்மை தரக்கூடிய நாள். வடிவமைப்பாளர்கள், தரகர்கள், சொத்து வியாபாரிகள், வங்கியாளர்கள், விளையாட்டு வீரர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டமான நாள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இன்று வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடை: ஏழைகளுக்கு தயிர் தானம் செய்யவும்.

#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

உங்கள் நிறுவனம் தவறான வழிகளுக்கு உங்களைப் பயன்படுத்தலாம் என்பதால்,இன்று உங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட சிறந்த நாள். விசாவுடன் காத்திருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம். புதிய வீடு அல்லது புதிய வேலை தேடுபவர்கள் நல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நடிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: இளம் பெண்ணுக்கு அழகுசாதனப் பொருட்களை தானமாக வழங்கலாம்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இளம் அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்பு, வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சி.ஏ.க்கள் தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புண்டு. விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்தவர்கள் பெரியவர்களின் ஆசியுடன் வெற்றி பெறுவார்கள். குரு மந்திரத்தை ஓத வேண்டும். மென்மையான பேச்சு இன்று அனைத்து விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் கட்சி மூத்தவர்களை கவரவும் ஒரு அழகான நாள்.பெண்கள் பங்குச்சந்தையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூடும்.

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடை: கோவிலில் பச்சை மஞ்சளை தானம் செய்யவும்.

#எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உறுதியாக இருங்கள் மற்றும் பணப் பலன்கள் உத்தரவாதம். உங்கள் கடந்தகால புண்ணியத்தின் பலனால் நல்ல விஷயங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களுக்கு உள்ள தொடர்பின் உதவியால், நாள் முடிவில் வெற்றி பெறுவீர்கள். அறிவைப் பெருக்க அதிக நேரம் செலவிடுவீர்கள். கருத்தரங்குகளில் பங்கேற்கும் மருந்துவர்கள் பாராட்டுக்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: பிச்சைக்காரருக்கு சிவப்பு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

பங்கு தரகர்கள், நகை வியாபாரிகள், கல்வியாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், சொத்து வியாபாரிகள் மற்றும் மருத்துவர்கள் சிறப்பு அங்கீகாரம் அல்லது மதிப்பீடு பெறுவார்கள். இன்றைய நாள் பாராட்டுக்கள் மற்றும் வளர்ச்சி நிறைந்ததாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படலாம். பதவி உயர்வு, நேர்காணல்கள், ஆடிஷன்கள் மற்றும் அரசாங்க உத்தரவுகள் மூலமாக லாபம் பெற அழகான நாள். விளையாட்டு வீரர்களும் மாணவர்களும் தங்களது முயற்சியில் ஒரு படி முன்னேற வாய்ப்புள்ளது. நடிகர்கள், ஆடிட்டர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
நன்கொடை: ஏழைகளுக்கு துணி தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 22 அன்று பிறந்த பிரபலங்கள்: உன்னி முகுந்தன், பௌராவ் பாட்டீல், சஞ்சய் ஜக்டேல், ராஜ்ஸ்ரீ தாக்கூர், பிஷ்னோய்,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி