Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 ஜூலை 2022) கோவிலில் தேங்காய்கள் தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (24 ஜூலை 2022) கோவிலில் தேங்காய்கள் தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஜூலை 24-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பண பரிவர்த்தனைகளுக்கு கடினமான நாள் என்பதால் உங்கள் மனதை உறுதியாக வைத்து கொள்ளுங்கள். பிராக்டிகலாக சிந்தியுங்கள் மற்றும் பார்ட்னர்ஷிப்பை தவிர்த்து கொள்ளுங்கள். டிசைனர்கள், நடிகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை ஏற்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை இன்று யோசிக்க வேண்டும். இல்லையெனில் அவதூறு ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஆடம்பரம் மற்றும் உற்சாகம் நிறைந்த ஒரு நாள். இல்லத்தரசிகள் விருந்தினர்களை வரவேற்க தயாராக இருங்கள். வாழ்க்கையில் செழிப்பைக் கொண்டு வர இன்று குடும்ப பொறுப்புக்களை நீங்கள் ஏற்க வேண்டும். உங்கள் காதல் உணர்வுகளை நிரந்தர உறவாக மாற்ற வாய்ப்புகள் அமையும். விநியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்கள் ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் அல்லது தேவைப்படுபவர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது உடல் தோற்றம் மற்றும் வார்த்தை ஜாலம் உங்கள் மீதான ஈர்ப்பை இன்று அதிகரிக்க செய்யும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், வசீகரமானதாகவும் இன்று வெளிப்பட்டு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உதவும். யோகா பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள், டிசைனர்கள்.செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் மஞ்சள் அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய ஆதாரங்கள் அல்லது புதிய யோசனை மூலம் பணம் சம்பாதிக்கும் நாள். உங்கள் நண்பர் அல்லது நிறுவனம் மூலம் வரும் வாய்ப்புகளை வரவேற்கவும். இன்று ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தரகர்கள், கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் மருந்து போன்ற வணிகங்களில் உள்ளோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். உங்களிடம் காணப்படும் சிறந்த பண மேலாண்மை உங்கள் வாழ்க்கையை குறைந்த இழப்புடன் வாழ உதவும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - கோவிலில் தேங்காய்கள் தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உடற்தகுதியை பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களின் வலுவான சோஷியல் நெட்வொர்க் இன்று புகழ் மற்றும் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். குழப்பமடையாமல் உங்கள் மனம் சொல்வதை கேட்டு முக்கிய முடிவுகளை எடுங்கள். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - கோயிலிலோ அல்லது நண்பருக்கோ துளசி செடியை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் சாதனைகளை கொண்டு வர கூடும். பிறரின் அக்கறை மற்றும் பாராட்டுகளை பெறுமளவிற்கு இன்று அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். குறிப்பாக விளையாட்டு வீரர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள் நகைக்கடைக்காரர்கள், நடிகர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். பெற்றோர்கள் குழந்தைகளின் செயல்திறனை நினைத்து பெருமைப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களுக்கு எஃகு பாத்திரங்களை நன்கொடையாக கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை உணருங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்பது இப்போது அவசியமாகிறது. உங்களின் தனிப்பட்ட செயல்திறன் மூலம் உயரதிகாரிகளை ஈர்ப்பீர்கள். தம்பதிகளுக்குள் நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்கள் பேச்சில் மென்மையை கடைபிடிக்கும் வரை வியாபார உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஆசிரமங்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும் . உங்கள் லட்சியம் மற்றும் கனவுகளை அடயடய நல்ல நாள். வியாபாரத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இருக்கும். இன்று குடும்ப நிகழ்வுகள் அல்லது நண்பர்கள் விருந்தில் கலந்து கொள்ள நேரம் செலவிடும் வாய்ப்பு உள்ளது. இன்று அசைவம் மற்றும் மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு குடிக்க குடிநீர் கொடுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீண்ட நாட்களாக நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பதால் நீங்கள் மிகவும் நிம்மதியாக இருப்பீர்கள். ஆசிரியர்கள், சட்டம், ஆலோசனை மற்றும் நிதித்துறையில் இருப்பவர்கள் புதிய உயரங்களைக் காண்பார்கள். உங்கள் திருமணம் தொடர்பான விஷயங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இன்று நல்ல நாள். இன்று செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யுங்கள்

ஜூலை 24 அன்று பிறந்த பிரபலங்கள்: மனோஜ் குமார், அசிம் பிரேம்ஜி, பங்கஜ் அத்வானி, கேசுபாய் படேல்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி