Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 செப்டம்பர் 2022) கோவிலில் பால் அல்லது எண்ணெய் வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (12 செப்டம்பர் 2022) கோவிலில் பால் அல்லது எண்ணெய் வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 12-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பொது மேடையில் பேசக் கூடியவர்கள் இன்று தலைவராக உருவெடுப்பதற்கான வாய்ப்பு உள்ள நாளாகும். நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றியை நோக்கி நகர இருக்கின்றன. சொத்து வாங்குவது மற்றும் சொத்து விற்பனை செய்வது ஆகிய இரண்டும் சுமூகமாக நடைபெறும். விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பீச் மற்றும் வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சுப் பழம் வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகம் சார்ந்த விஷயங்களில் நம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் ஆழ்மனம் சொல்வதுதான் உங்களுக்கான வழிகாட்டி. உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்கள் சிறப்பாக அமையும். பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் சீனியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கோவிலில் பால் அல்லது எண்ணெய் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தங்கள் சீனியர்கள் மற்றும் வழிகாட்டிகள் ஆகியோரிடம் இருந்து பாடகர்கள் இன்று மிகுந்த பாராட்டுகளை பெறுவார்கள். புதிய பணி தேடி வர இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் அறிவு மற்றும் பேச்சுத் திறனை பார்த்து மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளுமே சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - பெண் பணியாளருக்கு செந்தூரம் கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வாழ்க்கையில் புதியதொரு விஷயம் நடைபெற இருக்கிறது. அது புதிய பார்ட்னராக இருக்கலாம் அல்லது வேலையில் புதிய பொறுப்புகளாக இருக்கலாம். எதிர்கால பலன்களுக்கான விதைகளை இன்று விதைக்கவும். கட்டுமானம் அல்லது பங்குச்சந்தை தொழில் வளர்ச்சி வேகம் அடையும். இன்று அசைவ உணவுகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - பிச்சைக்காரர்களுக்கு உணவு தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எல்லோரையும் அனுசரித்து செல்லும் உங்கள் குணாதிசயம் நல்ல பலன்களை தர இருக்கும் நிலையில் கனிவாக பேசவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து ஆதரவு மற்றும் மரியாதை கிடைக்கும். உதவி கேட்டு வரும் உங்கள் நண்பருக்கு உதவி செய்யுங்கள். கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - பச்சைக் காய்கறிகளை தானமாக வழங்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையில் வளங்களை நிரப்புகின்ற புதிய பந்தங்கள் ஏற்பட இருக்கின்றன. அன்பு மற்றும் காதல் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் நாளாகும். குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடவும். விசாவுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நடிகர்கள் மற்றும் மீடியா துறையினருக்கு வெற்றி கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த கால உறவுகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தை மூலமாக அதற்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. கல்வி மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மூத்தவர்களின் ஆதரவு மற்றும் ஆசிகள் கிடைக்க இருக்கிறது. எதிர் பாலினத்தவர் மூலமாக அதிர்ஷ்டம் வர இருக்கிறது. கனிவாக பேசினால் அனைத்திலும் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சை சாதம் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிக சிரமமின்றி அதிர்ஷ்டத்தால் இன்றைக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்கள், பொது மேடைப் பேச்சாளர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு பாராட்டு கிடைக்க இருக்கிறது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மாலையில் பண பலன்கள் வர இருக்கின்றன.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பாடகர்கள், நடனம் ஆடுபவர்கள், எழுத்தாளர்கள், டிசைனர்கள் போன்றோருக்கு வேகமான வளர்ச்சி காத்திருக்கிறது. எதிர்பாராத பண வரவு அல்லது வெற்றி கிடைக்க இருக்கிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆவண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இன்றிலிருந்து வலது கையில் சிவப்பு நிற கயிறு அணியவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - வீட்டுப் பணியாளர்களுக்கு மாதுளம்பழம் வழங்கவும்.

செப்டம்பர் 12 அன்று பிறந்த பிரபலங்கள் : அமலா அகினேனி, பெரோஸ் காந்தி, புனீத் இஸார், பிராச்சி தேசாய், பிபூதிபூஷன் பந்தோபாத்யாய்,
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி