Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது... (மே 05, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது... (மே 05, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 05ம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணி சார்ந்த வளர்ச்சி தென்படுகிறது. தொழில்களில் முன்னெடுக்கும் முயற்சிகள் எளிதாக பூர்த்தி அடையும். தலைவர்களுக்கு இன்று அங்கீகாரம் கிடைப்பதுடன், புகழும் அதிகரிக்கும். உங்களுக்கு இன்று பரிசுகள் கிடைக்கும். யாரேனும் காதலை வெளிப்படுத்தலாம் அல்லது அன்புக்குரியவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் - ஏழைகளுக்கு வாழைப்பழம் தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆண்களுக்கு குழு உறுப்பினர்களிடம் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். பங்குச் சந்தைகளில் லாபம் கிடைக்க தாமதம் ஏற்படலாம். பிள்ளைகளின் கனவுகளை பெற்றோர் பூர்த்தி செய்ய வேண்டிய நேரம் இது. மிகுந்த அன்யோன்யம் காரணமாக தம்பதியர்களின் உறவுமுறை பலப்படும். இன்று வெள்ளை நிற உடை அணிய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு உப்பு தானமாக வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடங்களில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்கள் முடிவுக்கு எதிராக செயல்படுவார்கள். ஆகவே கவனம் தேவை. இன்றைக்கு நீங்கள் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தீர்கள் என்றால் உறவுநிலை பாதிக்கக் கூடும். சிந்தனைத் திறன் வாய்ந்த மக்களுக்கு முதலீடு செய்யவும், லாபம் பெறவும் நல்ல நேரம் வந்திருக்கிறது. கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றோருக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆசிரமங்களில் சிவப்பு அரிசி தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம். மார்க்கெட்டிங் சார்ந்த உத்திகளை செயல்படுத்தவும். இளம் ஜோடிகள் தங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்தலாம். அசைவ உணவை தவிர்த்து விட்டு, உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து, அதன்படி செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9

தானம் - உப்பு கலந்த பச்சை காய்கறிகளை ஏழைகளுக்கு வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நல்வாய்ப்புகள் கிடைக்கும். இன்று மிகுந்த அன்யோன்யமான தினம் என்பதால் காதல் உறவுகளை கொண்டாடுவதற்கான நாள் இதுவாகும். சிறப்புமிக்க நபரை சற்றும் எதிர்பாராமல் சந்திப்பீர்கள். இன்று பங்குச் சந்தை அல்லது சொத்துகளில் முதலீடு செய்யலாம். சவால்களை ஏற்கலாம். உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பச்சை தாவரங்களை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வீட்டில் இருந்து பணி செய்கிறீர்கள் என்றால் இன்றைக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாகும். இன்று பண வரவு மிக அதிகமாக இருக்கும். இன்றைக்கு அனைத்து இலக்குகளும் நிறைவேறும். இதனால், ஒரு வெற்றியாளராக நீங்கள் உருவெடுப்பீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2

தானம் - ஆசிரமனத்தில் குழந்தைகள் பால் தானம் செய்யவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உடல்நலன் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். நிதிசார்ந்த நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் அறிவுத்திறன் ஆகியவை நல்ல பலனைக் கொடுக்கும். வாழ்வியலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7

தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற பழங்களை கொடுக்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாளில் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்கும். எந்தவொரு சிக்கலில் இருந்து வெளிவரும் வாய்ப்பை உங்கள் தன்னம்பிக்கை வழங்கும். கால்நடைகளுக்கு தானம் வழங்க சிறப்பான நாள் ஆகும். தம்பதியர்களுக்கு மத்தியில் காதல் உணர்வுகள் சிறப்பாக இருக்கும். மருத்துவர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி சார்ந்த லாபம் கிடைக்க இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு தீவனம் தானமாக கொடுக்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் பொதுவெளியில் அறியப்பட்ட நபர் என்றால் வெற்றி கிடைக்கும். தங்கள் பார்ட்னர்களை ஈர்க்க விரும்பும் இளையவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. கூட்டத்தில் பேசுவது, நிகழ்ச்சியில் பங்கேற்பது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவது அல்லது போட்டித் தேர்வில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பான நாளாகும். நடிகர்கள், மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் போன்றோருக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அரக்கு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கர்ச்சீஃப் வழங்கவும்.

மே 05 அன்று பிறந்த பிரபலங்கள் : கயானி ஸெயில் சிங், கிருஷ்ண பூனியா, குரு அமர் தாஸ், மனோகர் லால் கட்டார், ராய் லெட்சுமி, குல்ஷன் குமார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி