Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஜூலை 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (20 ஜூலை 2022) ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஜூலை 20-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பார்ட்னருக்கு வாக்குறுதிகளை கொடுக்க நல்ல நாள். இன்று நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் அனுபவிப்பீர்கள், புகழ் பெறுவீர்கள். வேலையில் சக நண்பர்களின் பொறாமையை எதிர்கொள்வதை தவிர்க்க, குரு நாமம் சொல்லுங்கள். உங்கள் எதிர்காலத் திட்டங்களை பிறரிடம் சொல்வதை நிறுத்துங்கள். அலுவலகத்தில் உங்கள் முதலாளியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். காலை வீட்டிலிருந்து புறப்படும் முன் சிவன் மற்றும் சூரியனை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண் - 1
தானம் - கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிர்ஷ்டம் அதிகமிருப்பதால் இன்றைய இலக்கை அடைவது உங்களுக்கு எளிதானது. காதலை முன்மொழியவும், விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ள, புதிய தொழில் தொடங்கவும், அரசாங்க டெண்டர்களுக்கு விண்ணப்பிக்கவும் இன்று சிறந்த நாள். தண்ணீர், மருந்து, ஆடம்பர பொருட்கள், ஆடைகள், மருத்துவ பொருட்கள், வைரம், ரப்பர், விளையாட்டு பொருட்கள், திரவங்கள், எண்ணெய் மற்றும் உணவு உள்ளிட்டவை தொடர்பான வணிகங்களில் பணவரவு அதிகம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2
தானம் - ஏழைகளுக்கு அல்லது ஆசிரமங்களில் அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பொது மேடைகளில் உங்கள் அறிவை வெளிப்படுத்துவீர்கள். வீண் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளை தவிர்க்க உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். கற்பித்தல், பாடுதல், நடனம், சமையல், வடிவமைத்தல், நடிப்பு அல்லது ஆடிட்டிங் துறைகளில் இருந்தால் திறமையை வெளிப்படுத்தும் நேரமாக இன்று அமையும். தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று தாங்கள் செய்ய போகும் சாதனைகளை நினைத்து மகிழலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பீஜ்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9
தானம் - பெண்களுக்கு சந்தனத்தை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் சமூக வட்டத்தை விரிவுபடுத்த இன்று சிறந்த நாள். ஊழியர்கள் விற்பனை இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களது தனிப்பட்ட உறவு சிறப்பாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் தெரிகிறது. மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகள் அல்லது கால்நடைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் சிறந்த சாதனைகளை செய்ய வாய்ப்புள்ளதால் கொண்டாட்டம் களை கட்டும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு இன்று லாபத்தை தரும். குடும்பம் தொடர்பான முடிவுகள் அனைத்தும் இன்று சாதகமானதாக தெரிகிறது.பயணப் பிரியர்கள் நீண்ட பயணங்கள் செல்ல ஏற்ற நாள். பேச்சில் கவனம் மற்றும் உணவுகளில் கட்டுப்பாடு இன்று அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை மற்றும் அக்வா
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் நாளை சிரிப்புடன் தொடங்குங்கள், ஏனென்றால் மகிழ்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் கொண்ட ஒரு அழகான நாளாக இன்று உங்களுக்கு அமையும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் பாசத்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நடிகர்கள், மருத்துவர்கள், ஏற்றுமதி இறக்குமதி, துணி, ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருட்கள் தொடர்பான வணிகத்தில் இருப்போர் சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தெரிந்த பெண்களுக்கு வளையல்களை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் உங்கள் நம்பிக்கையை உடைத்தவர்களை மன்னியுங்கள். இன்று நிதி குறையும் மற்றும் வேலையில் புதிய தொடக்கம் இருக்கலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். சண்டைகளை தவிர்க்க உங்கள் துணையின் இயல்பை ஏற்று கொள்ளுங்கள். விநாயகர் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வது நாளை மிகவும் சிறப்பானதாக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - பிச்சைக்காரர்களுக்கு கோதுமையை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் பெயர், அதிகாரம், பணம், நட்பு மற்றும் மரியாதை என சகலத்தையும் அனுபவிக்கும் நாள். பணம் மற்றும் தொடர்புகளின் பலத்தைப் பயன்படுத்தி சட்ட வழக்குகள் இருந்தால் தீர்க்கப்படும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் இன்று அதிக கட்டணம் செலுத்த வேண்டும், ஏனெனில் அது அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும். பயணத்திட்டங்கள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - சனி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - தேவைப்படுபவர்களுக்கு பாதணிகளை வழங்குங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மனிதாபிமானம் மற்றும் தொண்டும் உங்களது இன்றைய வெற்றிக்கு முக்கியமாகும். பண பரிவர்த்தனை, ஆவணங்களில் கையொப்பமிடுதல் அல்லது அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். ஆங்கரிங், ஈவென்ட் மேனேஜ்மென்ட், விளம்பரம், அரசியல், மருந்துகள், டிசைனிங், மீடியா, நிதி அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் மிக பெரிய வளர்ச்சியை காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஏழைகளுக்கு தர்பூசணி தானம் செய்யுங்கள்

ஜூலை 20-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: அருணிமா சின்ஹா, நசிருதீன் ஷா, கிரேசி சிங், ஹர்திக் படேல், ராஜேந்திர குமார்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி