Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 15-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று கடவுளின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். பழைய நண்பரின் உதவி மூலம் சட்டப்பூர்வ அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களை தீர்த்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை அதிகரிக்க தோல் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - ஆசிரமங்களுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் யதார்த்த உணர்வுகளை சிறப்பான உறவுகளாக மாற்றுவதற்கான அன்பு நிறைந்த நாளாக இன்று உங்களுக்கு அமையும். வியாபாரத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேற்றுவீர்கள். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசியல்வாதிகள் அல்லது பொது வியாபாரிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் என்பதால் இந்நாளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நெருங்கிய நண்பர்களை தவிர பிறரிடம் நிதி விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். இசையமைப்பாளர்கள், டிசைனர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண் - 3
தானம் - தேவைப்படுபவர்களுக்கு மஞ்சள் தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் செய்துள்ள முதலீடுகளில் இருந்து வருமானம் விரைவில் கிடைக்கும் என்பதால் இன்று பொறுமை காக்க வேண்டும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் துறையில் உள்ளவர்கள் மற்றும் தரகர்கள் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து வேலைகளையும் இன்று சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு ஆடைகளை வழங்குங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வெற்றி மற்றும் வளர்ச்சியை ஒருசேர அனுபவிப்பீர்கள். பயணத் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் செயல்திறனுக்காக அங்கீகாரம் கிடைக்கும். இன்றைய நாளில் உங்களுக்கு விருப்பமானவை நிறைவேறும் என்பதால் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடக்கும் ஒரு பரபரப்பான நாளாக அமையும். வடிவமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். விழாக்களில் கலந்து கொள்ள, நண்பர்களைச் சந்திக்க, குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் மற்றும் ஷாப்பிங் செல்ல ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பெண்களுக்கு வளையல் தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை, தானியங்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள். உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட ஏற்ற நாள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவிலில் மஞ்சள் இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பழைய விஷயங்களை மறந்துவிட்டு இன்று முன்னேறுவதில் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றினால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. வணிகத்தில் இன்று பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். இன்று பயணத்தை தவிர்த்து விட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வணிகம் அல்லது வேலையில் அதிகாரம் பெற அல்லது அரசாங்கத் தொடர்புகளை அணுக இன்று சிறந்த நாள். நடன கலைஞர்கள், பாடகர்கள், டிசைனர்கள், ஓவியர்களுக்கு இன்று நாள் மிகவும் பிசியாக இருக்கலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ அறிவியல், விஞ்ஞானம், நிதி, ஜோதிடம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் உள்ளவர்கள் புதிய உயரங்களை இன்று காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ரம்யா கிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி, பூபிந்தர் சிங் ஹூடா, எம் விஸ்வேஸ்வரய்யா, கணேஷ் நாயக், சி.என்.அண்ணாதுரை
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி