Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (15 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்..!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 15-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    முழுமையான சுதந்திரத்தைப் பெற நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டும். தேவைக்கேற்ப வளைந்து போக வேண்டும். இன்று பல பொறுப்புகளை ஏற்பீர்கள். சில காலத்தில் சமுதாயத்தில் கடன் அதிகரிக்கும். பழைய நண்பரின் ஆலோசனையைப் பெற வேண்டும். சட்ட ரீதியான விஷயத்தில் உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரைச் சந்திப்பீர்கள். தோல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

    ராசியான நிறம்: சிவப்பு
    ராசியான நாள்: ஞாயிறு
    ராசியான எண்: 9
    தானம்: ஆசிரமத்திற்கு மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்யுங்கள்.

    #எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி முடிவெடுக்கும் போது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். ஒரு நண்பர் வரவால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளுடனான உறவு மேம்படும். உங்கள் உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சுமுகமாக நிறைவேறும். ஒரு பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேர இது சரியான நேரம். அரசியல் பிரமுகர்கள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். சேவைத் துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    ராசியான நிறம்: வான் நீலம்
    ராசியான நாள்: திங்கட்கிழமை
    ராசியான எண்கள்: 2 மற்றும் 6
    தானம் : ஏழைகளுக்கு வெள்ளை நிற அரிசியை தானம் செய்யுங்கள்.

    #எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    குருவின் பலம் அதிகரிக்க வாழை மரத்துக்கு சர்க்கரை சேர்த்து நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலைஞர்கள், இல்லத்தரசிகள், சில்லறை விற்பனையாளர்கள், பேக்கர்கள் அல்லது சமையல்காரர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது வியாபாரிகள் ஆகியோருக்கு அதிர்ஷ்டமான நாள். உங்கள் நண்பர்களுடன் நிதி ரீதியான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும். இசைக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி அறிவிப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தொழில் சிறக்கும்.

    ராசியான நிறம்: சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு
    ராசியான நாள்: வியாழன்
    ராசியான எண்கள்: 3 மற்றும் 1
    தானம்: தேவைப்படுபவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்கவும்.

    #எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருக்கிறது. கையில் உள்ள அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆடைகள் அல்லது காலணிகளை தானம் செய்வது அற்புதமான பலனைத் தரும். கட்டுமானம், இயந்திரங்கள், மென்பொருள் மற்றும் புரோக்கர் தொழில்களில் ஈடுபடுபவர்கள் இன்று ஆவணங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    ராசியான நிறம்: நீலம்
    ராசியான நாள்: செவ்வாய்
    ராசியான எண்: 9
    தானம்: அனாதை இல்லங்களுக்கு ஆடைகளை தானம் செய்யுங்கள்.

    #எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    இன்று நீங்கள் தான் விவாதத்தின் தலைப்பாக இருப்பீர்கள், அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரத்தை அனுமதிக்கும். புதிய முதலீடுகள் எளிதில் முடியும். உங்கள் வேலைக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். சொத்து அல்லது பங்குகளில் முதலீடு செய்வது நன்மை தரும். விளையாட்டு வீரர்கள் மற்றும் பயணிகளுக்கு அதிர்ஷ்டமான நாள். கூட்டங்களுக்குச் செல்லும் போது பச்சை நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். உங்கள் காதலன் அல்லது காதலிக்கு ப்ரொப்போஸ் செய்ய சிறந்த நாள்.

    ராசியான நிறம்: கடல் பச்சை
    ராசியான நாள்: புதன்
    ராசியான எண்: 5
    தானம்: பச்சை பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

    #எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    நீங்கள் கடந்தகாலத்தில் செய்த நற்செயல்களின் பலன்கள் இப்போது கிடைக்கும். இந்த வேலைகளால் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்களின் தேசபக்தி உணர்வு மற்றவர்களையும் ஊக்குவிக்கும். வேலை தவிர மற்ற வாய்ப்புகளை தேடலாம். குடும்ப நிகழ்வுகள், நண்பர்களைச் சந்திப்பது, குடும்பத்துடன் சுற்றுலா, பிக்னிக், மேடை நிகழ்ச்சிகள் அல்லது ஷாப்பிங் போன்றவற்றுக்கு சிறந்த நாள். வடிவமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

    ராசியான நிறம்: நீலம்
    ராசியான நாள்: வெள்ளிக்கிழமை
    ராசியான எண்: 6
    தானம்: பெண்களுக்கு நீல நிற துணியை தானம் செய்யுங்கள்.

    #எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    வீட்டின் கிழக்கு திசையில் காற்றாடியை வைக்கவும். அடுத்தடுத்து சில நாட்களில், நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் நடக்கும்; ஆனால் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் நீங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். நிதி முடிவுகளை எடுக்கும்போது உங்களின் அறிவு கைகொடுக்கும். உறவில் நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், மற்றும் தானியங்கள் சார்ந்த வேலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுத்தால் வணிக உறவுகள் சிறப்பாக இருக்கும்.

    ராசியான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
    ராசியான நாள்: திங்கட்கிழமை
    ராசியான எண்: 7
    தானம்: கோயிலுக்கு மஞ்சள் இனிப்புகளை தானமாக வழங்கவும்.

    #எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    விலங்குகளுக்கு உதவி மற்றும் சேவை செய்வது எப்போதும் அவசியம். நீங்கள் எடுக்கும் நிதி முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். உங்களுக்கு நிறைய பொறுப்புகள் சுமக்க வேண்டியிருக்கும். விரைவில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது அவசியம். நிதி ரீதியாகவும் காதல் ரீதியாகவும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.

    ராசியான நிறங்கள்: கடல் நீலம் மற்றும் சிவப்பு
    ராசியான நாள்: வெள்ளிக்கிழமை
    ராசியான எண்: 6
    தானம்: ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யுங்கள்.

    #எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால்)

    நெற்றியில் சந்தனம் அல்லது குங்குமம் பூசி இந்த நாளைத் தொடங்குங்கள். மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இன்று பெயர் மற்றும் புகழைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், நிதி, ஜோதிடம், மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளில் இருப்பவர்கள் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். வியாபாரம் அல்லது வேலையில் பெரிய பதவியைப் பெற தெரிந்தவர்களை பயன்படுத்துவீர்கள். இன்று சிவப்பு நிற ஆடைகளை அணிவது நன்மை தரும். நடன கலைஞர்கள், பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள், இல்லத்தரசிகள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

    ராசியான நிறம்: சிவப்பு
    ராசியான நாள்: செவ்வாய்
    ராசியான எண்கள்: 9 மற்றும் 6
    தானம்: சிவப்பு நிற பழங்களை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.

    ஆகஸ்ட் 15 அன்று பிறந்த பிரபலங்கள்: ஸ்ரீ அரவிந்த், ராக்கி குல்சார், அட்னான் சாமி, அயன் முகர்ஜி, ரமேஷ் போக்ரியால், ஏ. கே. ஹங்கல், நடிகர் அர்ஜுன்
    Published by:Selvi M
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி