Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (10 ஆகஸ்ட் 2022) ஏழைகளுக்கு அரிசியை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | ஆகஸ்ட் 10-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1: (1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மன உறுதியுடன் இன்றைய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, எனவே கடமையை தொடர்ந்து செய்யுங்கள். இன்று உங்கள் சுகபோகத்திற்கு எந்த குறையும் இருக்காது. அதிகாரம் மிக்கவர்களின் தொடர்பு நல்ல முன்னேற்றத்தை தரும். வெற்றியை அடைய சூரியன் மற்றும் குருவின் ஆசீர்வாதத்தை நினைவில் கொள்ளுங்கள். பயிற்சியாளர் கொடுத்த கடினமான பயிற்சிக்கு பலனாக, விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடுவார்கள். உங்களுக்கு பிடித்த விளையாட்டை சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை அல்லது அணியின் கேப்டனை சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்டமான நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு மற்றும் வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடை: ஏழைகளுக்கு மஞ்சள் நிற அரிசியை தானம் செய்யுங்கள்

#எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் படிப்பதற்காக பணத்தை முதலீடு செய்ய ஏற்ற நாள். வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே இன்று உங்களால் சமநிலையை பின்பற்ற முடியும். வெற்றி வாய்ப்பு விரைவில் கைக்கு வர உள்ளதால், வேலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். உறவினர் மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்க ஏற்ற நாள். முதலீட்டின் மீதான வருமானம் அதிகரிக்கும். கல்வி, புத்தகங்கள், நிதி, மின்னணுவியல், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகள், சூரிய ஆற்றல், விவசாயம், பெட்ரோல் மற்றும் இரசாயனங்கள் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, லாபம் ஈட்ட நல் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: வெள்ளை மற்றும் வானம் நீலம்
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண்: 2
நன்கொடை: பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குங்கள்

#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அழகு சாதன பொருட்கள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் திறமை, அறிவு ஆகியவற்றை பொது இடத்தில் வெளிப்படுத்துங்கள். மாணவர்களின் கடின முயற்சிக்கு பலனாக வெற்றி கிடைக்கும், அதேசமயம் ஆசிரியர் அல்லது வழிகாட்டிக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். வாழ்க்கை துணையை அன்பான வார்த்தைகள் பேசி உங்கள் பக்கம் கொண்டு வர ஏற்ற நாள். திருமண வீட்டில் வைத்து காதலை புரோபஸ் செய்ய சிறப்பான நாள். இன்று நீங்கள் வெகுஜன கவனத்தை சிறப்பாக ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் அரசியலில் அல்லது அரசு அதிகாரியாக இருந்தால். மாணவர்கள் தேர்வு எழுதும் முன் குரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் மற்றும் இன்று நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும். வியாழன் கிரகத்தின் சக்தியை அதிகரிக்க பெண்கள் மஞ்சள் நிற உணவை சமைத்து முழு குடும்பத்திற்கும் பரிமாற வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்: இளஞ்சிவப்பு மற்றும் ஊதா
அதிர்ஷ்டமான நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 1
நன்கொடை: கோயிலுக்கு சந்தனத்தை நன்கொடையாக வழங்கவும்.

#எண் 4 ( 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடினமாக வேலை செய்து வந்த மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இன்று வேலைப்பளு குறையும். நிர்வாக ரீதியிலான வேலைகள் அதிகம் இருப்பதால் நாள் பரபரப்பாக காணப்படும். பாதுகாப்பு, சொத்து விற்பனையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வணிகம், ஐடி ஊழியர்கள் இன்று முதலீடு செய்த பணம் திரும்ப வர வாய்ப்புள்ளது. பிளான் பண்ணாம எதையும் செய்யக்கூடாது. பங்குகளைக் கையாள்வதில் கவனமாக இருங்கள், மூத்தவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். சூட்டைத் தணிக்க சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். உங்கள் விருப்பமான பொழுதுபோக்கிற்காகவும் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறம்: கிரே
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: பச்சை அல்லது கருப்பு நிற தானியங்களை ஏழைகள் அல்லது கால்நடைகளுக்கு தானம் செய்யுங்கள்

#எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தம்பதிகளுக்கு பரஸ்பர நம்பிக்கை இல்லாவிட்டால், தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். உங்களுடன் பணியாற்றும் ஊழியர் அல்லது புதிதாக அறிமுகமானவரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அக்வா அணிவது கூட்டங்களில் உதவும். தயவு செய்து பார்ட்டிகள் மற்றும் அசைவத்தை இன்றைக்கு தவிர்க்கவும். சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நிறம்: அக்வா
அதிர்ஷ்டமான நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடை: கால்நடைகள் பருக தண்ணீர் வையுங்கள்

#எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அழகான தோற்றம் ஆளுமையை அதிகரிக்கும் என்பதால், அழகு சாதன பொருட்களை வாங்க முதலீடு செய்யுங்கள். இன்றைய தினம் சிறப்பாகவும், நல்ல வாழ்க்கை துணை கிடைத்ததை எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவராகவும் உணர்வீர்கள். பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பார்ட்னரை சந்திக்க மற்றும் அலுவலகத்தில் பிரசன்டெஷன் கொடுக்க சரியான நேரம். அரசாங்க டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க உங்களுக்கு போதுமான அதிர்ஷ்டம் உள்ளது. வாகனம், மொபைல், வீடு வாங்க அல்லது சிறு பயணத்தைத் திட்டமிட நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். இன்றைய தினம் காதல் உறவு செழிக்க வாய்ப்புள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்பதால், நடிப்பு மற்றும் அரசியலைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டமான நிறங்கள்; நீலம் மற்றும் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: கோயிலுக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( 8, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முதலாளியை கவர்வது என்பது எளிதான விஷயமில்லை என்றாலும், முடிவில் அதற்கான வெகுமதி காத்திருப்பதால் நெகிழ்வுதன்மையுடன் பணியாற்றுங்கள். இன்று அறிவு மற்றும் பணத்தின் சக்தியைப் பயன்படுத்துங்கள். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது பண பலத்தை பயன்படுத்தி சட்ட வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும் வணிக ஒப்பந்தங்களை முறியடிக்க இன்று நெட்வொர்க்கிங் முக்கியமானது. தவறான தொடர்பு காரணமாக உங்கள் பங்குதாரர் புகார் வைத்திருப்பார். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இருண்ட நிறங்களை அணிவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் உயர்ந்த ஞானத்தைக் கொண்டிருப்பதால் உங்கள் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் விண்ணைத் தொடும் அளவிற்கு வெற்றி பெறுவார்கள். பயணத்திட்டங்கள் தாமதமாக வாய்ப்புண்டு. சமூக சேவை செய்ய சரியான நாளாக இன்றைய தினம் அமையும்.

அதிர்ஷ்டமான நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: தேவை இருப்பவர்களுக்கு காலணிகளை தானமாக வழங்குங்கள்

#எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது புரோபஷனல் லைஃப்பை புதுப்பிக்க வேண்டும். தம்பதிகள் எதிர்காலத்தை திட்டமிட ஒரு அழகான நாள். அரசு ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். கவர்ச்சி, விமான நிறுவனங்கள், மென்பொருள், அமானுஷ்ய அறிவியல், இசை, ஊடகம் அல்லது கல்வித் துறையில் உள்ளவர்கள் புகழ் கொண்டாடுவார்கள். வருங்கால அரசியல்வாதிகள் இன்று சில புதிய பதவிகளை வழங்குவார்கள், பொது பேச்சு, நேர்காணல், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை வழங்க இந்த நாளை பயன்படுத்த வேண்டும். இசைக்கலைஞர்கள் மற்றும் குழு விளையாட்டுகளின் பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளால் பெருமைப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள். பயணத் திட்டங்கள் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், காதல் உறவை வலுப்படுத்தவும் இன்று சிறந்த நாள்.

அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: சிவப்பு நிறத்தில் இருக்கும் மசூர் பருப்பை எந்த வடிவத்திலும் தானம் செய்யலாம்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிறந்த பிரபலங்களின் பட்டியல்: வி வி கிரி, பூலான் தேவி, ஷபீர் அலுவாலியா, ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, பிரத்யுஷா பானர்ஜி
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி