Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 16-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களின் ஆளுமை சொத்து தொடர்பான தீர்மானங்களில் வெற்றியை பெற்று தரும். அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்திட, விளக்கக்காட்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இன்று நல்ல நாள். உதவி கேட்டு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். வலுவான பின்னணி கொண்ட நபரின் உதவி மூலம் சட்ட அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களை தீர்ப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஆசிரமங்களுக்கு சமையல் எண்ணெயை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் உங்கள் ஆவணங்களை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வாழ்க்கையில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் கூட்டு சேரும் நேரம். பிறரிடம் உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கிரே

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வசீகரம் உங்களை சுற்றி இருப்பவர்களை ஈர்க்கும். பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இன்று தங்களது தொழில் வளர்ச்சிக்கான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - குழந்தைகளுக்கு மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று அதிக பண வரவு இருப்பது எதிர்காலத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தும். இன்று உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களில் உள்ளோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு எலுமிச்சைகளை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிஅல்லது சீனியர் இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலால் ஈர்க்கப்பட்டு உங்களை பாராட்டுவார்கள். உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் மற்றும் வெகுமதி கிடைக்கும் நாள். இன்று அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை உடலில் அணியுங்கள். வாழ்க்கையில் இன்று உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் அதிக பொறுப்புகளை எடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் தோளில் அதிக பொறுப்புகளை எடுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. வணிகம் மற்றும் வேலை வளர்ச்சி அழகாக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்சினைகள் இன்று மிகவும் சிக்கலாக இருக்கும். வாக்குவாதங்களில் இருந்து விலகி பேச்சில் கனிவு, நடத்தையில் நிதானம் காட்ட வேண்டும். ஹோட்டல் வியாபாரிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோயிலில் வெள்ளி நாணயம் கொடுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆளுமை மற்றும் பகுப்பாய்வு திறன் தான் உங்கள் சொத்துக்கள். எனவே உங்கள் இமேஜிற்கு தீங்கு விளைவிக்கும் சர்ச்சைகளை எதிர்கொள்வதை தவிர்க்கவும். இன்றைய தினம் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். வழக்கறிஞர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆடிட்டர்களுக்கு சிறந்த நாள். பார்ட்னர்ஷிப் போடாத வரை வணிக உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - மஞ்சள் துணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதல் உறவுகளை வலுப்படுத்த இன்று சிறந்த நாள். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். குறுகிய கால இலக்கை அடைந்து விட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் நீண்ட கால இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கும் அதே நேரம் ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்ற மறக்காதீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு தேவையான உணவுகள் அல்லது துணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் புதிய உச்சம் காண்பார்கள். இன்று பண வரவு நிறைந்த நாள். வணிகம் அல்லது வேலையை மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு ஒரு அழகான நாள் காத்திருக்கிறது என்பதால் எதிலும் டென்ஷன் ஆகாமல் நிதானமாக செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பிச்சைக்காரர்களுக்கு பாதணிகளை தானமாக வழங்குங்கள்

செப்டம்பர் 16-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பி சிதம்பரம், தேவி லால், மீனா, பிரசூன் ஜோஷி, ராமலிங்க ராஜு, ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி