ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (28 செப்டம்பர் 2022) ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 28-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெறுவதன் மூலம் சிறுசிறு தடைகளை இன்று குறைத்து கொள்ளுங்கள். குடும்ப விழா மற்றும் நேர்காணல்களில் கலந்து கொள்ள சிறந்த நாள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் உங்கள் இலக்குகளை அடைவது இன்று எளிதாக இருக்கும். விளையாட்டு வீரர்கள் இன்று வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பணியிடத்தில் வேலைகளில் ஆவணம் செலுத்தும் அதே நேரத்தில் செயலில் ராஜதந்திரம் தேவை. திரவங்கள், மின்னணுவியல், மருந்துகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி, சூரிய ஆற்றல், விவசாயம், ரசாயனங்கள் உள்ளிட்டவை சார்ந்த துறைகளில் இருப்போர் லாபம் ஈட்ட சிறப்பு வாய்ப்புகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு தயிர் தானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் கேப்டன், பயிற்சியாளர், ஆசிரியர், ஃபினான்ஸியராக இருந்தால் இன்று வெற்றியை ருசிப்பபீர்கள் மற்றும் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான சிறந்த நாள் இது. நெருக்கமான உறவிடம் திருமணத்திற்கான உங்கள் காதலை முன்மொழிய ஒரு சிறந்த நாள். விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியாளரின் உதவியுடன் வெற்றி பெறுவார்கள். இன்று அரசு அதிகாரிகள், கலைஞர், விளையாட்டு வீரர், விநியோகஸ்தர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - கோவிலில் சந்தனம் கொடுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் முதலீடு செய்யும் விஷயங்கள் மற்றும் நிதி குறித்து ரகசியம் காக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதிகள், உணவகங்கள், பங்குகள், நகைகள், உற்பத்தி, சில்லறை விற்பனை உள்ளிட்டவற்றில் உள்ளோர் அவற்றை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனது புண்படும்படி யாராவது பேச கூடும். எனவே பொறுமை மற்றும் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - குழந்தைகளுக்கு பச்சை திராட்சைகளை சாப்பிட கொடுங்கள்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் முக்கியமானவற்றுக்கு மட்டுமே செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கூடுதலாக பயன்படுத்தாமல் எச்சரிக்கையாக இருங்கள் விளையாட்டு, கட்டுமானம், ஊடகம், வெளிநாட்டு பொருட்கள் மற்றும் விளையாட்டுகளில் உள்ளவர்கள் இன்று சிறப்பு மதிப்பீட்டை எதிர்கொள்ள தயாராக இருங்கள். இன்று சொத்து தொடர்பாக வரும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்குங்கள்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் கொண்டாட்டம் மூலம் இன்று மகிழ்ச்சி அடைவீர்கள், ஏனெனில் நீங்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் அவர்களில் செயல்பாடுகள் இருக்கும். குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று அரசு டெண்டர்களில் ரிஸ்க் எடுக்க போதுமான அதிர்ஷ்டம் இருக்கும். ஆடைகள், நகைகள், வாகனங்கள், மொபைல், வீடு வாங்க மற்றும் அல்லது குறுகிய பயணம் திட்டமிட சிறந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதால் குறிப்பாக எதிலும் இன்று உங்கள் சிந்தனையை பயன்படுத்த வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றுவது எதிர்காலத்தில் பணத்தைச் சேமிக்க உதவும். . இன்று மேற்கொள்ளப்படும் திருமண முயற்சிகள் தாமதமாகும். சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடுகள் செய்வதன் மூலம் செல்வ செழிப்பைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கால்நடைகளுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

செல்வாக்கு அல்லது பண பலத்தை பயன்படுத்தி இன்று உங்களது சட்ட வழக்குகளை தீர்த்து கொள்வீர்கள். மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். பெரும்பாலும் இன்று நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் இன்று புதிய உயரங்களை காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு கீரை சாப்பிட கொடுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இசைக்கலைஞர்களின் பெற்றோர் இன்று பெருமைப்படும் நாள். அரசு டெண்டர்கள், சொத்து பேரங்கள், பாதுகாப்பு படிப்பு, மருத்துவ படிப்புகள் சார்ந்த விஷயங்கள் இன்று சிறப்பாக இருக்கும். பேங்கர்ஸ், கட்டடம் கட்டுபவர்கள், மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், செய்தி தொகுப்பாளர் மற்றும் நடிகர்கள் இன்று புதிய விஷயங்களை சந்திப்பார்கள். இளம் அரசியல்வாதிகள் மற்றும் இளம் கலைஞர்கள் இன்று சில புதிய பதவிகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு உணவுகளை தானம் செய்யுங்கள்

செப்டம்பர் 28 அன்று பிறந்த பிரபலங்கள்: சாய்பாபா, ரன்பீர் கபூர், மௌனி ராய், அபினவ் பிந்த்ரா, பூரி ஜகன்னாத், லதா மங்கேஷ்கர்

Published by:Selvi M
First published:

Tags: Numerology