ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று கோவிலில் பால் தானம் செய்வது நல்லது..

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று கோவிலில் பால் தானம் செய்வது நல்லது..

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 24 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆளுமைப் பண்பிற்கும், யதார்த்த வாழ்விற்கும் இடையே நீங்கள் இன்று தடுமாற்றத்தை எதிர்கொள்வீர்கள். ஆகவே, உங்கள் திட்டங்களுக்கு எதிராக நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் புத்திக்கூர்மை உறுதுணையாக இருக்கும். உங்கள் அலுவலக பிரச்னை அல்லது சட்டப் பிரச்னையை தீர்த்து வைக்கக் கூடிய ஒருவரை நீங்கள் சந்திக்கக் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3

தானம் - ஆசிரமங்களில் இனிப்புகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பலம் மற்றும் தொழில் துறையில் நீங்கள் காட்டும் நேர்மை ஆகியவை காரணமாக சட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இன்றைக்கு வீட்டில் பொறுப்புணர்வோடு செயல்படுங்கள். இன்றைக்கு உங்கள் காதல் கனவுகள் நிறைவேறும். தொழிலில் பெரும் நிறுவனத்தோடு இணை சேருவதற்கான நேரம் இது. தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீளம்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - கோவிலில் வெள்ளி நாணயம் தானம் செய்யவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

திட்டங்களை தீட்டுவதற்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் இன்று மிகச் சரியான நாள் ஆகும். இன்றைய தினம் முற்றிலுமாக உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும். புதிய உறவு ஒன்றை சந்திக்க இருக்கிறீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, தற்போதைய தேவை என்ன, பாசிடிவ் விஷயம் என்ன என்பதையெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - தேவைப்படுவோருக்கு மஞ்சள் தானம் செய்யவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான புதிய வாய்ப்பை திறந்த மனதுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். கட்டுமானம், இயந்திரம், சாஃப்ட்வேர் மற்றும் இடைத்தரகர் போன்ற தொழில்களில் இருப்பவர்கள் இன்று ஆவணங்கள் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். இன்று அதிகமான ஆன்மீக நம்பிக்கை ஏற்படும். பொறுப்புள்ள பெற்றோராக இருப்பதன் பலன்களை உணருவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஆதரவற்றோர் இல்லத்தில் துணிகளை தானமாக வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு உங்கள் நண்பர், குடும்பம், முதலாளி, சக பணியாளர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் மிகுந்த குழப்பம் கொண்டதாக இருக்கும் என்பதால் சொத்து சார்ந்த முதலீடுகளில் பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பச்சை நிற ஆடைகளை அணிந்தால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். காதல் உறவுகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - பணியாளர்களுக்கு பச்சை நிற விதைகளை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீதிக்கான உங்களது காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. உங்களைத் தவிர வேறெதுவும் உங்களுக்கு அமைதியை தர முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் தோளில் நிறைய பொறுப்புணர்வுகள் தொற்றிக் கொள்ளும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தந்தை வழிகாட்ட இருக்கிறார். இது அவர்களின் வாழ்க்கைக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களுக்கு ஸ்டீல் பாத்திரங்கள் தானமாக கொடுக்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து, பழிவாங்கும் உணர்வை கைவிடுங்கள். வலியை போக்க வேண்டியது மிக முக்கியம். பணியிடங்களில் பிறருடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும். தம்பதியருக்கு இடையேயான உறவில் நேர்மைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். ஆவணங்களில் இன்று நம்பிக்கை வைக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் பால் தானம் செய்ய வேண்டும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் கவலைகளை புறம்தள்ளிவிட்டு, வணிகத்தில் கவனம் செலுத்தவும். உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்கள் கடின உழைப்பை குறைத்துக் கொண்டு, ஒற்றைப் பாதையில் செல்லவும். உங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும் மூத்த ஊழியரின் ஆலோசனைகளை கேளுங்கள். தொழில் சார்ந்த பரிவர்த்தனைகள் வெற்றி அடையும். பயணங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கால்நடைகளுக்கு பச்சை நிற தானியங்களை தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் துரோகத்தால் பாதிக்கப்படுவீர்கள். ஆகவே கவனமாக இருக்க வேண்டும். சட்டம், ஆலோசகர் மற்றும் நிதி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி கிடைக்க இருக்கிறது. பழைய நண்பர்கள் மூலமாக தொழிலில் புதிய பலம் கிடைக்கும். திருமணத்திற்கான நேரம் கை கூடி வருவதால், வீட்டில் உங்கள் விருப்பத்தை தெரிவிப்பதற்கான தருணம் இது. கோபத்தை கட்டுப்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண்களுக்கு ஆரஞ்சு துணி தானம் செய்யவும்.

மே 24 அன்று பிறந்த பிரபலங்கள் : ராஜேஷ் ரோஷன், அனிதா பாடியா, ஆர்யா பாப்பர், ராஜ்தீப் சர்தேசாய், காஸி நஸ்ருல் இஸ்லாம்

First published:

Tags: Numerology