Home /News /spiritual /

எண் கணித பலன்: 10-ம் எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்..!

எண் கணித பலன்: 10-ம் எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்..!

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | 10 எண்ணில் பிறந்தவர்கள் வலிமையான மற்றும் சுதந்திரமான காதலர்களாக இருப்பார்கள். எதையும் பகுப்பாய்வு செய்து முடிவெடுப்பார்கள். புத்திசாலிகள். டீமில் உள்ளவர்கள் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நன்றாக பழகக்கூடியவர்கள்.

மேலும் படிக்கவும் ...
    #எண் 10:

    பத்தாம் எண் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த எண்ணுடன் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் முதன்மை கிரகமான சூரியனால் முழுமையாக இயக்கப்படுகிறார்கள். 30 வயது வரை வாழ்க்கையின் குறிக்கோளைத் தேடி அலைய வேண்டியிருக்கும், ஆனால் அந்த வயதைக் கடந்ததும் வாழ்க்கையில் ஒற்றை குறிக்கோளுடன் நிலையான வளர்ச்சியைப் பெறுவார்கள்.

    10ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

    10 எண்ணில் பிறந்தவர்கள் வலிமையான மற்றும் சுதந்திரமான காதலர்களாக இருப்பார்கள். எதையும் பகுப்பாய்வு செய்து முடிவெடுப்பார்கள். புத்திசாலிகள். டீமில் உள்ளவர்கள் அவர்களை ஒதுக்கித் தள்ளினாலும், ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் நன்றாக பழகக்கூடியவர்கள். லட்சியவாதிகள், எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என நிற்பார்கள். தன்னுடன் இருப்பவர்களை விட உயர் பதவிக்கு சென்றால் மட்டுமே அவர்களது மனம் திருப்தி அடையும். சிறந்த ஆளுமை கொண்டவர்கள், ஆனால் பிறரைக் கட்டுப்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    தொழில்:

    வணிகத்திற்கான சிறந்த வெற்றி மந்திரம் என்னவென்றால், அவர்கள் வணிகத்தில் நேரடி முதலீட்டாளர்களாக இருக்க கூடாது, மாறாக அவர்கள் வெளியில் இருந்து முதலீட்டாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். பங்குதாரராக அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்பினாலும், ஆரம்ப வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.

    சூதாட்டம், பந்தயம் போன்ற விஷயங்கள் உங்களை கவர்ந்திழுக்க கூடும், ஆனால் அவற்றை விட்டு விலகி இருப்பது நல்லது. பிடிவாத குணம் அதிகம். பிறர் கருத்துகளுக்கு அல்லது விருப்பங்களுக்கு மதிப்பளிக்காமல் தான் கூறுவதையே பிறர் செய்ய வேண்டும் என்று நியாயமற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்துகிற எதேச்சாதிகாரமான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    Also Read : எந்த ராசிக்கல்லுடன் எதை இணைத்து அணியக் கூடாது: பொருத்தமான ரத்தினக்கற்களை அணிவதன் முக்கியத்துவம்!

    நீண்ட காலத்திற்கு ஆபத்தான வேலையை தேர்வு செய்ய கூடியவர்கள். தோல் கடிகாரத்திற்கு பதிலாக தங்க கடிகாரம் அணிவது நல்லது. சூரிய சக்தி, விவசாய நகைகள், மின்னணுவியல், மென்பொருள், தளபாடங்கள், கல்வி, செங்கற்கள் நிலம், இயந்திரங்கள், கற்கள், கவர்ச்சி, ஊடகம், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழில்களை செய்பவர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

    Also Read : துக்கங்களைப் போக்கும் வாராஹி தேவி வழிபாடு: ஜூன் 4ம் தேதி வளர்பிறை பஞ்சமி விசேஷம்

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

    அதிர்ஷ்ட தினம்: ஞாயிறு

    நன்கொடை: ஏழைகளுக்கு மஞ்சள் நிற பருப்புகளை தானமாக கொடுங்கள்

    1. சூரிய பகவானுக்கு காலை வேளைகளில் தண்ணீர் வைத்து வழிபடுங்கள்.

    2. ஞாயிற்றுக்கிழமை காலை சூர்யா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவது நல்லது.

    3. சூரிய சின்னம் உள்ள தங்கச் சங்கிலியை அணியவும்.

    4. அசைவம், மதுபானம், புகையிலை மற்றும் தோல் ஆகியவற்றை தவிர்க்கவும்

    5. பெண்கள் கேஸ் அடுப்புக்கு மேலே சூரிய பகவான் படத்தை வைக்கலாம்
    Published by:Selvi M
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி