ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

உங்கள் பிறந்த தேதியில் 3ஆம் எண் வருகிறதா.? அப்படியானால் உங்களுக்கான அதிர்ஷ்டங்கள் இதோ.!

உங்கள் பிறந்த தேதியில் 3ஆம் எண் வருகிறதா.? அப்படியானால் உங்களுக்கான அதிர்ஷ்டங்கள் இதோ.!

3ஆம் எண்

3ஆம் எண்

Numerology 3 | 3ஆம் எண் வியாழன் என்று அழைக்கக் கூடிய குருவுக்கு உரிய அம்சமாக இருப்பதால், உங்களுக்கு ஆசிரியர், தாய், பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உங்கள் பிறந்த தேதியில் நேரடியாக 3 என்ற எண் வருகிறதா? அப்படியானால் இந்த எண் குறித்த சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். இது திறமை மற்றும் அதனை வெளிப்படுத்துவதற்கு உரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. 3 என்பது வியாழனுக்கு உரிய எண் ஆகும்.

தங்கள் பிறந்த தேதியில் யாருக்கெல்லாம் 3 என்ற எண் வருகிறதோ, அவர்கள் பன்மடங்கு திறமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். மேலும், இவர்களுடைய சிறப்புமிக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த திறமையை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வித்தையை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் அனுசரித்து வேலை செய்யக் கூடிய பக்குவம் உங்களிடம் இருக்கிறது. 3ஆம் எண் வியாழன் என்று அழைக்கக் கூடிய குருவுக்கு உரிய அம்சமாக இருப்பதால், உங்களுக்கு ஆசிரியர், தாய், பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். இதனால் நீங்கள் ஒரு விளையாட்டு வீரராகவோ, ஆசிரியராகவோ, நிதி அதிபராகவோ வருவீர்கள். சிலர் கலைஞர்கள் மற்றும் சமையலராக இருக்கக் கூடும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - ஆரஞ்சு, சிவப்பு, வயலெட்

அதிர்ஷ்ட நாட்கள் - வியாழக்கிழமை மற்றும் திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண்கள் - 3 மற்றும் 2

உங்கள் பலம் :

எல்லோரையும் ஈர்க்கும் திறன், தாராள சிந்தனை கொண்டவர்கள், மிகுந்த திறமை உடையவர்கள், மதிமயக்கும் பேச்சு திறன், ஆர்வமுள்ள சிந்தனை, இலட்சியப் பார்வை, சமூகத்தில் கலந்து பழகும் குணம், புத்தாக்க சிந்தனை, எதார்த்த முடிவுகளை எடுக்கும் வல்லமை, ஆன்மீக சிந்தனை, கொண்டாட்டம், அறிவுசார்ந்து இயங்குதல், சக மனிதர்களிடம் செல்வாக்கு ஆகிய குணங்களை உடையவர்களாக இருப்பீர்கள்.

பொழுதுபோக்குகளில் ஆர்வம், எப்போது கற்கும் ஆர்வம், புதியவற்றை முயற்சிக்கும் வேட்கை, திறமையை அழகாக எடுத்துரைக்கும் பக்குவம் ஆகியவை உங்களிடம் இருக்கும்.

Also Read : ஏழரைச் சனி என்றாலே எல்லாரும் பயப்பட வேண்டுமா.?

எங்கு, எதில் கவனம் தேவை

ஆற்றலை வீணடிப்பீர்கள், மக்களை கண் மூடித்தனமாக நம்புவீர்கள், வாழ்க்கையில் ஒற்றை இலக்கை நிர்ணயிக்க தவறுவீர்கள், பந்தங்களில் உணர்ச்சிகரமான அணுகுமுறை, ஆரோக்கியத்தை கூட கவனிக்காமல் இலக்கை நோக்கி பயணிப்பது.

பிடித்தமான வேலை

டிசைனர், ஆசிரியர், எழுத்தாளர், கலைஞர், ஆடிட்டர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர், அரசியல், பால் வியாபாரம், வழக்கறிஞர், ஆலோசனை சேவைகள், ரசாயனம் மற்றும் மருந்து விற்பனை சார்ந்த தொழில், ஆன்மீக குரு, நம்பிக்கை தரக் கூடிய ஆலோசகர்,

Also Read : எண் கணித ஜோதிடம் | 23 அதிர்ஷ்டமான பிறந்த தேதி.!

தானங்கள் மற்றும் எச்சரிக்கைகள் :

* கோவிலில் சந்தனக்கட்டை தானம் செய்யவும்.

* துளசி செடி முன்பாக விளக்கேற்றி, குரு மந்திரம் உச்சரிக்கவும்.

* அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு துரோகம் இழைக்கக் கூடும். ஆகவே கவனமாக இருக்கவும்.

* நகைகள் உள்பட அனைத்து உடமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

* சந்தன நிற ஆடை அணியலாம் அல்லது நெற்றியில் சந்தனம் வைக்கவும்.

* வீட்டின் வடக்கு சுவரில் மரப்பொருள் ஒன்றை வைக்கவும்.

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News