Home /News /spiritual /

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 01, 2022)

எண் கணித பலன்கள்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் நாள்... (ஏப்ரல் 01, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 1ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த நாள் லாபகரமானதாக அமைய இருக்கிறது. அத்துடன் அறிவு மேம்படும். இன்று எந்தவொரு சவாலையும் ஏற்கும் ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி உங்களுக்கு உண்டு. ஆகவே வணிகத்தில் துணிந்து சவாலான காரியங்களை மேற்கொள்ளலாம். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர். ஆகவே, கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யவும்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலில் இருப்பவர்கள் அதை அடுத்தக்கட்ட பந்தத்திற்கு எடுத்துச் செல்ல சரியான நாளாகும். உங்கள் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே சீரான நிலை கிடைக்கும். குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவழிக்க நல்ல நாளாகும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்க இருக்கிறது. ஆகவே, நிதி சார்ந்த விஷயங்களில் உயர்ந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ மற்றும் வெள்ளை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைய நாள் உங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டம் தரக் கூடியதாகும். மாணவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதே சமயம், உங்கள் வழிகாட்டியை நினைவுகூற மறக்காதீர்கள். காதல் மற்றும் திருமண ஆசைகளை வெளிப்படுத்த உகந்த நாளாகும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - புத்தகங்கள் அல்லது நோட்டுகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்பவர் என்றால், இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன. உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவதற்கு மறந்து விடாதீர்கள். பெரும்பாலான நேரம் திட்டமிடுதலில் கழிந்துவிடும். தனிப்பட்ட உறவுகளில் ரொமாண்டிக் திருப்பங்கள் நடைபெற இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் சிறிது நேரம் கழிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு பச்சை தானியங்கள் வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குழுக்களில் இணைந்து பணியாற்றுபவர்களை இன்று ஹீரோ போல பார்க்க இருக்கின்றனர். தலைமை பண்பை ஏற்றுக் கொள்ள இதுவே சரியான தருணம். உங்கள் சுதந்திரத்தை நியாயமற்ற வகையில் பயன்படுத்த வேண்டாம். சக ஊழியர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருப்பதுடன், ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - குழந்தைகளுக்கு செடிகளை தானமாக கொடுக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டவரைப் போல உணர்வீர்கள். உங்கள் குழந்தைகளின் முழு ஆதரவு கிடைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு ஒப்பந்தங்களில் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. வாகனங்கள், மொபைல் அல்லது வீடு வாங்குவதற்கு அல்லது குறுகிய பயணம் செல்வதற்கு சரியான நாள் இதுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - வெள்ளை நாணயத்தை தானமாக வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நிர்வாக மேலிடத்தை நீங்கள் கவர்ந்து, தேவையான ஊக்கத்தொகை பெறுவீர்கள். நல்ல திறன்வாய்ந்த செயல்பாட்டிற்கு உங்கள் புத்திக்கூர்மை மற்றும் குழுப் பணி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர் பாலினத்தவரின் கருத்துகளை ஏற்க தயாராக இருங்கள். வழக்கறிஞரின் அறிவுரையை செயல்படுத்தினால் பணத்தை மிச்சம் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவில்களில் மஞ்சள் நாணயத்தை தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பணியிடத்தில் நிலவும் சூழல் உங்களுக்கு எதிரானதாக இருக்கிறது. ஆகவே, நாள் முழுவதும் அமைதி காக்கவும். எங்கெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கிறதோ, அங்கெல்லாம் அறிவுத்திறன் மற்றும் சமயோஜித திறனை பயன்படுத்துங்கள். சட்ட ரீதியான வழக்குகளை சமரசம் மூலமாக தீர்க்க முடியாது. வணிகத்தில் உங்கள் பார்ட்னர் உங்களை ஆதிக்கம் செய்ய முயற்சிக்கலாம். அது தற்காலிகமானது.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - சனிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு காலணியை தானமாக வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசி, விளையாட்டு வீரர், கட்டுமானத் தொழில் செய்பவர், டிசைனர், ஆயத்த ஆடை தொழில் செய்பவர்கள், வங்கிப் பணியில் இருப்பவர்களின் கனவு நனவாகும் நாளாகும். உறவுகளுக்கு இடையே நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு மசூர் பருப்பு தானம் செய்யவும்.

மே 01 அன்று பிறந்த பிரபலங்கள் : அனுஷ்கா சர்மா, அமர் சஹீத் பந்தன் சிங், டியானா ஹைதீன், அஜீத் குமார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி