Home /News /spiritual /

சர்வ வல்லமை தரும் திருவெண்காடு புதன் ஸ்தலம்... புதன் பகவானுக்கு விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் பெருகும்...

சர்வ வல்லமை தரும் திருவெண்காடு புதன் ஸ்தலம்... புதன் பகவானுக்கு விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் பெருகும்...

புதன் பகவான் ஸ்தலம் திருவெண்காடு

புதன் பகவான் ஸ்தலம் திருவெண்காடு

Pudhan Bhagavan | திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்...

மேலும் படிக்கவும் ...
  நாகை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதாரண் யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது. நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன் ஸ்தலம். சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவர் புதன். சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகபதம் அடைந்தவர். சந்திரன் புதனுடன் திருவெண்காட்டை அடைந்து சுவேதாரண்ய பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், சயரோகத்தையும் நீங்க பெற்றான். இத்தலத்தில் புதனுக்கு தனிச் சன்னதி இருக்கிறது. இந்த கோவில் சோழ வளநாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள பதினோராவது திருத்தலமாகும். சீர்காழியிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது.

  புதன் ஸ்தல பெருமைகள்:

  இந்த ஸ்தலம் சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம். சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய மூன்று சிவமூர்த்திகள், பிரம்ம வித்யாம்பிகை, சுவேத மகாகாளி, சவுபாக்கிய துர்க்கை ஆகிய மூன்று சக்திகளின் திருநாமங்கள் அமைந்த தலம். இங்கு மூன்று மூர்த்தி, மூன்று அம்பாள், மூன்று தீர்த்தம், மூன்று விருட்சம் என்று அமைய பெற்ற சிறப்புடையது.

  மேலும் இந்த திருவெண்காடு திருத்தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள உயிர்கள் உய்யும் வண்ணம் 1008 விதமாக பெருமான் தாண்டவம் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

  பூஜை நேரங்கள்:

  கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6 முதல் 7 திருப்பள்ளி எழுச்சி, 8.30 முதல் 10 வரை கால சந்தி பூஜையும், 11.30 முதல் 12 வரை உச்சிக்கால பூஜையும், மாலை 5.30 முதல் 6.30 வரை சாயரட்சை பூஜையும், 7.30 முதல் 8.30 வரை இரண்டாம் கால பூஜையும், 8.30 முதல் 9.30 மணி வரை அர்த்தசாமம் பூஜையும் நடைபெறும்.

  சிறப்புகள்:

  1. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

  2. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத  கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

  3. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைக்கூடும்.

  4. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

  5. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

  புராணகதை

  இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

  புதனை வழிபட வேண்டிய முறை

  திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

  Also see... புதன்பகவான் குறித்து அறிய வேண்டிய அற்புத தகவல்கள்...

  கிடைக்கும் பலன்கள்

  திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும். திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும். சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Hindu Temple

  அடுத்த செய்தி