ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தென்காசி குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா... வேத மந்திரங்களுடன் கொடி ஏற்றப்பட்டது....

புகழ்பெற்ற குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோவில் கொடிமரம் முன்பாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ... இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது .

  தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றால நாதர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

  பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்களுடன் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 5ம் திருநாள் தேரோட்டமும் 8ம் திருநாள் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் தாண்டவ தீபாராதனையும் 10 திருநாள் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசனமும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... Vastu tips | வீட்டில் இந்த செடிகளை வளர்க்க கூடாதாம்... ஏன் தெரியுமா?

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Temple, Tenkasi