ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Pournami : பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

Pournami : பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

புரட்டாசி பௌர்ணமி சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்கும் முக்கிய நாள். புரட்டாசி பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் நாளை அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

  சிவபெருமானின் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

  இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள்.

  இந்த மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

  மேலும் படிக்க.. புரட்டாசியில் இந்த ராசிகாரர்களுக்கு யோகம்தான்...

  இதன் காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க.. 

  பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன? 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன?                       

  புரட்டாசி மாதத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களை ஏன் தவிர்க்க வேண்டும்?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Purattasi, Thiruvannamalai