Home /News /spiritual /

திருவண்ணாமலை மகா தீபம் நாளையுடன் நிறைவு...

திருவண்ணாமலை மகா தீபம் நாளையுடன் நிறைவு...

டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜருக்கு தீபம் அணிவிக்கப்பட்டு பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் மை பிரசாதமாக வழங்கப்படும்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய விழாவாக நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபத்தினை ஜோதி வடிவில் அண்ணாமலையார் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிப்பார். கடந்த நவம்பர் 19 தேதி ஏற்றப்பட்ட தீபம் ஆனது நாளை நம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அண்ணாமலையார் கோவிலில் நடைபெறக்கூடிய உலகப் புகழ்பெற்ற இந்த தீப திருவிழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில் உள்ளே மகாதீப தரிசனத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுபடி உள்ளூர் பக்தர்கள் 5,000 நபர்கள் வெளியூர் பக்தர்கள் 15,000 நபர்கள் என 20,000 நபர்கள் கிரிவலம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் இன்று வரை ஏராளமான வெளியூர் பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபட்டு பின்னர் கிரிவலம் செய்து வழிபட்டு வந்தனர்.

மகா தீபம் ஏற்றப்பட்ட முறை

2,668 அடி உயரம் கொண்ட மகாதீப மலைமீது 5.9 அடி உயரம் கொண்ட கொப்பரையில் ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட தாடா துணியை திரியாக கொண்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 3,500 கிலோ நெய்யினால் தொடர்ந்து 11 நாட்கள் தீபமானது ஏற்றப்பட்டது.

தீப திருவிழா நிறைவு

இந்த தீப திருவிழா நாளை நிறைவு பெறுகிறது. வருகிற 30-ஆம் தேதி கோவில் ஊழியர்கள் மூலமாக தீப கொப்பரை ஆனது அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜருக்கு தீபம் அறிவிக்கப்பட்டு பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் மை பிரசாதமாக வழங்கப்படும். நெய் காணிக்கை செலுத்திய பொதுமக்கள் 21ஆம் தேதி முதல் ரசீது உடன் தீப பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Thiruvannamalai

அடுத்த செய்தி