ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்... முன்பதிவு செய்வது எப்படி?

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்... முன்பதிவு செய்வது எப்படி?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

அண்ணமலையார் கோயில் இணையதளத்தில் www.arunachaleswarartemple.tnhrce.in  இன்று முதல் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவில் பங்கேற்க ஆன்லைனில் இலவசமாக முன்பதிவு தொடங்கியுள்ளது. மகா தீபம் ஏற்றும் நாளில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 10ம் தேதி கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

  வரும் 19ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயர மலையின் மீது மகாதீபமும் ஏற்றப்படும். கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கார்த்திகை தீப நாளன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை.

  நாளை முதல் வரும் 23ம் தேதி வரை தினமும் 13 ஆயிரம் பேர் மட்டும் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் பேர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் இருப்பார்கள். இதற்காக அண்ணமலையார் கோயில் இணையதளத்தில் www.arunachaleswarartemple.tnhrce.in  இன்று முதல் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒருவருக்கு ஒரு நுழைவுச் வீட்டு மட்டுமே வழங்கப்படும். கோயிலுக்கு வரும் போது அனுமதிச் சீட்டுடன் ஆதார் அட்டையும் வைத்திருக்க வேண்டும்.

  நவம்பர் 17ம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20ம் தேதி வரை கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கவும் அனுமதியில்லை. அதேபோல அந்த 4 நாட்களும் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவிழா நாட்களில் சிறப்பு பேருந்து, ரயில் வசதிகள் இருக்காது.

  கார்த்திகை தீபம் ஏற்றப்படும் 19ம் தேதி மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் அனுமதி கிடையாது. ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Tiruvanamalai