• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருவண்ணாமலை தீபத்திருவிழா... காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவில்...

திருவண்ணாமலை தீபத்திருவிழா... காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவில்...

karthigai Deepam | திருவண்ணாமலையில் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பத்துக்கும் மேற்பட்ட காவல் கண்காணிப்பாளர் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Share this:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நிறைவு நாளான நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் கருவறையின் முன் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபம் மலையின் மீது மகா தீபமாக ஏற்றப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டும் பக்தர்கள்யின்றி திருவிழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பிற்பகல் 1 மணி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை வெளி மாவட்ட, மாநில, வெளிநாட்டு, பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆன்மீக பக்தர்கள் கோவிலுக்குள் செல்லவும் மலை ஏறவும் அன்னதானம் செய்யவும் முற்றிலுமாக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பக்தர்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதால் திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலும் தற்போது அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் படிக்க.. திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதை திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறயினர் ஈடுபட்டுள்ளனர். ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகரம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பதாகைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே வரவேண்டாம் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எங்கெல்லாம் ஏற்றினால் நல்லது?

மேலும் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பத்துக்கும் மேற்பட்ட காவல் கண்காணிப்பாளர் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் இன்று அதிகாலை முதல் முழுமையாக காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மேலும் படிக்க... முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்!

திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: