Home /News /spiritual /

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -16

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -16

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.

    ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

    திருப்பாவை பாடல் - 16

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
    கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
    வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
    ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
    மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
    நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

    பொருள்:

    எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

    திருவெம்பாவை பாடல் - 16

    திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். 20 பாடல்களிலும் இறுதியில் எம்பாவாய் என்னும் வார்த்தையில் பாடல் முடிவடைகிறது…

    முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
    என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
    மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
    பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
    முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

    பொருள்:

    மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

    மேலும் படிக்க.. பிறந்தது மார்கழி மாதம்.. திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1   

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -2   

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -3       

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -4                      

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -5     

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -6       

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -7     

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -8    

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -9    

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -10

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -11     

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -12    

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -13

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -14

    ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் -15
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aandal, Thiruppavai

    அடுத்த செய்தி