இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், மூன்றாவது அலை வரும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே, அனைத்து மாநில அரசுகளும் விழிப்பாக இருந்துவருகின்றன. அரசியல் கூட்டங்கள், மதக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் இன்னும் மூன்று மாதங்கள் அதிக அளவில் இருக்கும். எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தகவல் அளித்துள்ளன. எனவே தான் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தற்போது அளிக்கப்படுகிறது. அடுத்த மாதம் ஏழாம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
எனவே பிரமோற்சவ நாட்களில் அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கும்பமேளாவிற்கு சென்றது போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொரோனா மூன்றாவது அலை பரவுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும். பிரமோற்சவ சாமி ஊர்வலம் கோவில் மாட வீதிகளில் நடைபெறாது என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.