முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்.. சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்.. சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

காளஹஸ்தி கோயில்

காளஹஸ்தி கோயில்

Tirupati Maha shivratri | திருப்பதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோவில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தியில் உள்ள ஞான பிரசன்னம்பா சமேத வாயுலிங்கேஸ்வரர் கோவில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கோவில்களிலும் தற்போது மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு காலை, இரவு ஆகிய வேலைகளில் சாமி ஊர்வலம் வெவ்வேறு வாகனங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகங்கள் செய்துள்ளன.

மேலும் இரண்டு கோவில்களிலும் நாளை இரவு நந்தி வாகன புறப்பாடு, ஞாயிறு அன்று இரவு லிங்கோத்பவ சேவை ஆகியவை நடைபெற உள்ளது. எனவே அவற்றை கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன உணவு, குடிநீர் ஆகியவை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகங்கள் செய்து வருகின்றன. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Also see... ஈஷாவின் மகா சிவராத்திரி 2023: ஈசனுடன் ஓர் இரவு - மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் இலவச நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள்

மேலும் நாளை அதிகாலை 2.30 மணியில் இருந்து அதிகாலை 4.30 மணி வரை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை தேரோட்டம், காலை 10.30 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நந்தி வாகன சேவை நடக்கிறது.

மேலும் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து புருஷாமிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாணம், இரவு திருவாச்சி உற்சவம் ஆகியவை நடை பெற உள்ளது.

First published:

Tags: Maha Shivaratri, Tirumala Tirupati