திருநள்ளாறு கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சியா? நிர்வாகம் விளக்கம்

Thirunallar Temple |

திருநள்ளாறு கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சியா? நிர்வாகம் விளக்கம்
திருநள்ளாறு கோவில்
  • News18
  • Last Updated: January 22, 2020, 12:48 PM IST
  • Share this:
உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வரும் 24-ம் தேதி சனி பெயர்ச்சி கிடையாது என்றும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 24-ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

சனிபகவான் இப்போது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. அதாவது ஜனவரி 24-ம் தேதி திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஏற்படுகிறது.


அதே நேரம் வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் அது ஜனவரியிலா அல்லது டிசம்பரிலா என்பதில்தான் பெரிய குழப்பம் உள்ளது.

திருக்கணித பஞ்சாங்கத்தை தொடர்கிறவர்களுக்கு இந்த குழப்பம் இல்லை. ஜனவரி 24-ம் தேதிதான் சனிப்பெயர்ச்சி. அதே நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பவர்களுக்கு டிசம்பர் 27-ம் தேதிதான் சனிப்பெயர்ச்சியாகும். ஆனால், இதை அறியாதவர்கள் திருநள்ளாறு ஆலயத்தில் சனி பெயர்ச்சி நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருநாள்ளாறு சனிபகவான் பரிகார தலத்தில் சனிப்பெயர்ச்சி டிசம்பரில்தான் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருநள்ளாறு சனீஸ்வர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.இப்பெயர்சியில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனுஷ் ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்