ஒரு மனிதனின் ஆன்ம பலத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்ய வழி வகுக்கும் விரதம் ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி தினத்தில் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த ஆவணி தேய்பிறை ஏகாதசி தினம் காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகின்றது. சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினங்கள் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வருவது எப்படி விசேஷமானதாக கருதப்படுகின்றதோ, அதே போன்று ஏகாதேசி தினங்கள் “பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி” போன்ற நட்சத்திர தினங்களில் வருவது மிகவும் சிறப்பான ஒரு சுபதினமாக கருதப்படுகின்றது.
அதிலும் இன்றைய ஏகாதேசி தினம் திருமாலின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் மனித உருவில் உலகில் அவதரித்து, “விசிஷ்டாத்வைதம்” என்கிற கொள்கையின் அடிப்படையில் வைணவத்தை நிலை நிறுத்திய வைணவ ஆச்சாரியார் “ராமானுஜர்’ அவதரித்த “திருவாதிரை” நட்சத்திரம் மற்றும் மனிதர்களுக்கு செல்வத்தையும், ஞானத்தையும் அளிக்கக்கூடிய ‘குரு” பகவானுக்குரிய வியாழக்கிழமையில் “புனர்பூசம்” நட்சத்திரம் என இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கை கொண்ட மிக அற்புதமான தினமாக உள்ளது. எனவே இந்த நன்னாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்வது சிறப்பு. இத்தகைய நாளில் பெருமாள் பாடலை கேட்டு அருள்பெறுங்கள்...
பாடியவர்: சூலமங்கலம் சகோதரிகள், வீரமணிதாசன், பாம்பே சகோதரிகள், ஸ்ரீஹரி, ஹரிணி
இசை: மாணிக்க விநாயகம், அரவிந்த், எல்.கிருஷ்ணன், பிரதீப், ஆர்.குரு மஹேஸ்வர், கண்மணிராஜா
பாடல் : தஞ்சை கல்யாணசுந்தரம், ஸ்ரீராம் சர்மா, குருநாத சித்தர், வி.ஆர்.வரதராஜன், உளுந்தூர்பேட்டை சண்முகம்.
தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
நன்றி : சிம்போனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.