நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

பெருமாள்

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

  • Share this:
திருப்பதி என்றதும் லட்டும் ஏழுமலையானின் பிரசாதமும்தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வாழ்வில் ஒரு முறையேனும் திருப்பதிக்கு சென்றுவர மாட்டோமா என்ற ஆசை பலருக்கு இருக்கிறது...

புதிதாக திருமணம் ஆனவர்கள் திருபத்திக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்று நினைப்பார்கள்.. சிலர் திருமணத்தையே திருப்பதியில் நடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் தற்போது கொரோனா காலமாக இருப்பதினால் திருப்பதிக்கு சென்றுவர சில கட்டுபாடுகளும் விதிமுரைகளும் உள்ளன.

 டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டம்

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த திட்டத்தின்படி, உங்கள் வீட்டில் யாருக்கேனும் திருமணம் நிச்சயம் நடந்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால், அந்த திருமணத்திற்கான திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த முகவரியில், திருமண பத்திரிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :
To,
Sri Lord Venkateswara swamy,
The Executive Officer
TTD Administrative Building
K.T.Road
Tirupati - 517501.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அப்படி அனுப்பப்படும் திருமண தம்பதிகளுக்கு திருப்பதி பாலாஜியின் பிரசாதம் மற்றும் பிற மங்கள பொருட்களை, தம்பதிகளுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைக்கும்.





மாதிரி படம்


தம்பதிகளுக்கு அனுப்பப்படும் பிரசாதத்தில் என்னென்ன இருக்கும் தெரியுமா?

புதுமண தம்பதிகளுக்கு கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் திருமண முக்கியத்துவத்தைச் சொல்லும் ஏழுமலையானின் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் நம்முடைய திருமண பத்திரிக்கையை எம்பெருமானுக்கு சமர்ப்பித்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் கிடைப்பதோடு, திருப்பதி கோயிலின் பிரசாதத்தைப் பெற்று மகிழலாம்.

மேலும் படிக்க... குழந்தைப்பேறு அருளும் திருவோணம் விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?             


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vaijayanthi S
First published: