திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவக்கம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பதி கொடியேற்றம்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 9:28 AM IST
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை மணி 6.03 முதல் 6.30 வரை மீன லக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. திருப்பதி மலையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. புராண காலத்தில் மகாவிஷ்ணு ஏழுமலையான் அவதாரம் எடுத்து திருப்பதி மலையில் எழுந்தருளிய பின் முதன் முதலில் பிரம்மா ஏழுமலையானுக்கு திருப்பதி மலையில் ஒன்பது நாட்கள் உற்சவம் நடத்தியதாக கூறப்படுகிறது. எனவேதான் திருப்பதி மலையில் நடைபெறும் ஒன்பது நாள் உற்சவத்திற்கு அப்போது முதல் பிரம்ம உற்சவம் என்ற பெயர் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புராண காலம் முதல் ஒவ்வொரு மாதமும் திருப்பதி மலையில் பிரமோற்சவம் நடைபெற்றதாக பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

அதன்பின் ஏற்பட்ட பல்வேறு கால மாற்றங்களை தொடர்ந்து தற்போது ஆண்டுக்கு ஒரு முறை வருடாந்திர பிரம்மோற்சவம் என்ற பெயரில் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படும்.

திருப்பதி கொடியேற்றம்எனவே பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலையில் வழக்கமாக காணப்படும் கோலாகலம், கொண்டாட்டம், கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்பு ஆகியவற்றை இந்த ஆண்டில் காண இயலாது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து உடன் எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

எனவே பிரம்மோற்சவ நாட்களில் வழக்கமாக திருப்பதி மலையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தையும் இந்த ஆண்டில் காண இயலாது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்தை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து முடித்துள்ளது. பிரம்மோற்சவ ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோவிலில் கண்கவர் வகையில் வண்ண மின்விளக்குகள், பல்வேறு வகையான மலர்கள், காய், காணிகள் ஆகியவற்றால் தேவஸ்தான நிர்வாகம் அலங்கரித்துள்ளது.

திருப்பதி கொடியேற்றம்
இந்த நிலையில் நேற்று மாலை மணி 6.03 முதல் 6.30 வரை மீன லக்கனத்தில் ஏழுமலையான் கோவில் தங்க கொடிமரத்தில் கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை அர்ச்சகர்கள் வேத மந்திர கோஷங்களுக்கு இடையே ஏற்றி வைத்தனர்.
கொடியேற்றம் நடைபெற்றது முதல் பிரம்மோற்சவம் துவங்கியதாக ஐதீகம். அதனை தொடர்ந்து இரவு மணி 8.30 முதல் 9.30 வரை ஏழுமலையானின் பெரிய சேஷ வாகன சேவை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரம்மோற்சவ வாகன சேவைகள் நடைபெறும் போது மாடவீதிகளில், தேவஸ்தான ஜீயர்கள் திவ்ய பிரபந்த பாராயணம் படிப்பது, வேத பண்டிதர்கள் வேதம் ஓதுவது ஆகியவை வழக்கம்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வாகன சேவைகள் மாட வீதிகளில் நடைபெறாது என்பதால் பிரம்மோற்சவத்தின் தொடர்புடைய இதுபோன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெற உள்ளது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading