Home /News /spiritual /

அயப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை பூஜை... ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

அயப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை பூஜை... ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...

இந்த கார்த்திகை பூஜை விழாவில் 100 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டு முலைப்பாரி எடுத்து நாட்டுப்புற பாடல் கும்மிபாடல் பாடியும் கோலாகலமாக விழாவை நடத்தினர்.

    அயப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் சுடலை மாட சுவாமிக்கு திருக்கார்த்திகை படுகை பூஜை விழா நடைபெற்றது. வெகு விமரிசையாக நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.

    சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி அம்மன் ஆலயத்தில் திருகார்த்திகை படுகை பூஜையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பார்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கனியான் கூத்துடன் சுடலை மாட சுவாமிக்கு
    அகில இந்திய வாணொலி புகழ் சேலம் M.பழனிச்சாமியின் நையாண்டி மேள வாத்தியம் மற்றும் பாரம்பரிய வடக்கன்குளம் ராமகிருஷ்ணன் குழுவினரின் கனியான் கூத்து மகர இசையுடன் கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுடல மாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியில் பக்தகோடிகள் ஏராலமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ சுடலை மாட சுவாமி அருளுடன் ஸ்ரீ பார்வதி அம்மனின் ஆசிபெற்றனர்.

    மேலும் படிக்க... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி 5-ம் நாள் உற்சவம்...

    மேலும் கூடியிருந்த100 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டு முலைப்பாரி எடுத்து நாட்டுப்புற பாடல் கும்மிபாடல் பாடியும் கோலாகலமாக விழாவை நடத்தினர்.

    மேலும் படிக்க... திருப்பதியில் இருந்து பத்மாவதி தாயாருக்கு பரிசு அனுப்பிய ஏழுமலையான்...

    ஸ்ரீ பார்வதி அம்மன் ஆலயத்தின் தர்மக்கர்த்தா திருசெல்வகுமார் சுடலைமாட சுவாமி உருவில் தீப்பந்தம் ஏந்தி அருள்வாக்கு கூறினார். கார்த்திகை மாதத்தில் வருடா வருடம் நடைபெறும் இந்தப் பாரம்பரிய நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி