ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH: திருச்செந்தூர் முருகன் கோயிலின் சூரசம்ஹாரம் - நேரலை

WATCH: திருச்செந்தூர் முருகன் கோயிலின் சூரசம்ஹாரம் - நேரலை

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

LIVE : Thiruchendur Soorasamharam 2022 முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகரெ நாளான இன்று சூரசம்காரம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து இன்றே கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  நேரலையில் காண..

  ' isDesktop="true" id="827675" youtubeid="apHzpUzW77o" category="spiritual">

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

  இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். மேலும் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Live, Murugan temple