Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு சில வாய்ப்புகள் கிடைக்க கூடும் நாள் இன்று (11 ஜூன் 2022)..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு சில வாய்ப்புகள் கிடைக்க கூடும் நாள் இன்று (11 ஜூன் 2022)..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  மேஷம்

  உங்களுடைய ஒரு சின்ன முயற்சியும், கடுகளவு கிடைத்த தகவல் தொடர்பும் நீங்கள் முயன்று வந்த விஷயத்தை வேகப்படுத்தலாம். நீங்கள் சில வகையான பணிக்காக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், நீங்கள் இப்போது அவ்வாறு செய்யலாம். ரியல் எஸ்டேட் அல்லது சில வேலைகளில் பணிபுரிவோருக்கு வளர்ச்சி தெரியலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஓவியம்

  ரிஷபம்

  நேர்காணல் எதிலாவது பங்கேற்றிருந்தால், அதன் மூலம் சில வாய்ப்புகள் கிடைக்க கூடும். மேலும் நீங்கள் நேர்காணலில் பங்கேற்றவர்களிலேயே கவனிக்க கூடிய நபராக இருந்திருப்பீர்கள். நீங்கள் விரைவில் ஒரு விருந்து நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருக்கும். வழக்கமான உடற்பயிற்சி முறை பரிந்துரைக்கப்படுகிறது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - அணில்

  மிதுனம் 

  இன்றைய தினம் நீங்கள் கொந்தளிப்பான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி இருக்கலாம், அதனால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சியுங்கள். யாரோ வேண்டுமென்றே உங்களைத் தூண்டியிருக்கலாம். யாரேனும் ஒருவரின் தற்செயல் கருத்து காரணமாக நீங்கள் புண்பட்டிருந்தால், மன்னித்து மறந்துவிடுவது நல்லது.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செல்லப்பிராணி

  கடகம் 

  ஒரு பரிட்சைக்கு தயாராக இருங்கள், ஏனென்றால் அது அப்போது உங்களுக்கு சிந்திக்கவோ, எதிர்வினையாற்றவோ நேரம் இருக்காது. நீங்கள் ஒரு தனியார் வேலையில் இருந்தால், சவாலான காலக்கெடு வரக்கூடும். ஒருவர் உங்களுடைய சில கடந்த கால நினைவுகளை மறக்க உதவலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - நேர முத்திரை

  சிம்மம் 

  இப்போது வரை நீங்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடு பொடியாக்க முடிந்தது. வரவிருக்கும் சில புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராகுங்கள். தேவைக்கும், ஆசைக்கும் இடையே மனது சண்டையிடலாம், ஆனால் அதை நீங்கள் திறம்பட சமாளிப்பீர்கள்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தங்க நாணயம்

  கன்னி

  உங்கள் கடந்தகால முதலீடுகளுக்கான வெகுமதிகள், மனதளவில் அல்லது உணர்ச்சிவசப்பட்டு இப்போது சாட்சியாக இருக்கலாம். ஓய்வெடுக்கவும், இந்தக் கால அளவைக் கணக்கிடவும் இப்போதே நல்ல நேரம். திட்டமிட்ட முன்னேற்றத்தை வடிவமைப்பதில் இப்போது அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஊசலாடும் சாய்வு நாற்காலி

  துலாம்

  ஏற்கனவே நிதானமான மற்றும் நிலையான முயற்சிகள் மூலம் இலக்கை அடைவதில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருப்பீர்கள். அணியில் ஒரு புதிய நபர் நுட்பமான ஆனால் நல்ல ஆரம்ப தாக்கத்தை ஏற்படுத்தலாம். வேலைக்கு விண்ணப்பத்து இருந்தால் அது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - தெளிவான குவார்ட்ஸ் படிகம்

  விருச்சிகம் 

  கடந்த கால முயற்சிகளின் முடிவுகள் பிரமிக்க வைக்கலாம். அதற்காக நீங்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சட்ட தகராறும் தலைதூக்கக்கூடும். உங்கள் மனைவிக்கு சில சிக்கல்கள் இருக்கலாம், அவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கருப்பு டூர்மேலைன்

  தனுசு

  உங்களுக்கு அதிக யோசனை இல்லாத ஒன்றைச் செய்ய அழுத்தம் கொடுக்கப்படலாம். உங்கள் நேரத்தை உங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளுங்கள், பிறர் தன்னுடன் நேரம் செலவிடும் படி அழைத்தால் இல்லை என்று சொல்வது சரியான முடிவாக இருக்கலாம். ஒரு சூழ்நிலையில் அதிக நாடகம் தேவைப்படாமல் போகலாம். நீங்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பிரமிடு

  மகரம்

  உங்கள் உள் மனதுக்குள் எழும் குரலானது உங்களை இதுவரை நீங்கள் செய்யாத ஒரு விஷயத்தை செய்யும் படி வழிநடத்தக்கூடும். உங்களைச் சிறப்பாக விவாதிக்கவும் வெளிப்படுத்தவும் நீங்கள் உந்துதல் பெறலாம்.உங்களின் தனிப்பட்ட உடமைகளைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - புதிய பை

  கும்பம்

  வாழ்க்கை மற்றும் வழக்கத்தின் மீதான உங்கள் உற்சாகம் பாராட்டுக்குரியது. சில சமயங்களில் நீங்கள் அதை எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படலாம். உங்கள் அன்புக்குரியவரை நீண்ட நாட்களாக பார்க்கவில்லை, ஆனாலும் சோம்பல் காரணமாக தொடர்பு கொள்ளாமல் இருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளை இன்னும் ஆளமாக ஆராய வேண்டும்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மீன் தொட்டி

  மீனம் 

  ஒரு விஷயத்திற்காக நீங்கள் உங்களுடைய ஒட்டுமொத்தமான முயற்சிகளையும் பயன்படுத்தி இருந்தால், நிச்சயம் அந்த விஷயத்தில் ஒரு சிறப்பான செய்தி காத்திருக்கிறது. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்கள் ஒரு தனித்துவமான தீர்வைக் காணலாம். உடல்நலக் கவலைகள் முன்னுரிமையில் கவனிக்கப்படலாம். வெளிநாட்டில் இருந்து சாதகமான செய்திகள் வரலாம்.

  உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - குத்துவிளக்கு ஸ்டேண்ட்
  Published by:Elakiya J
  First published:

  Tags: Astrology, Oracle Speaks

  அடுத்த செய்தி