தாம்பத்திய விஷயத்தில் தான் சிறந்தவராக இருக்க வேண்டும் என ஆண்கள் அனைவரும் விரும்புவதுண்டு. ஏனென்றால், ஒவ்வொரு ஆணும் தனது அன்புக்கு உரியவரிடம் கட்டிலில் தான் தனது முழு திறமையை காட்ட விரும்புகிறார்கள். சிலர் இயற்கையாகவே உடலுறவில் திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால், சிலர் என்னதான் முட்டி மோதினாலும் கட்டில் விஷயத்தில் மோசமாக இருப்பார்கள்.
சிலர் தங்கள் கூட்டாளர்களுடன் படுக்கையில் உல்லாசமாக இருக்க பாரம்பரிய முறையை விரும்பினாலும், மற்றவர்கள் மசாலாப் படத்தில் வரும் ஆண்களை போலவே தங்களை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், அனுமதி பெறுவது. இதற்கு அவர்களின் ராசியும் காரணம் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா?. அந்த வகையில், உடலுறவில் கில்லாடிகளாக இருக்கக்கூடிய ராசிகள் பற்றி பார்க்கலாம்.
மிதுனம் : இவர்கள் அன்பானவர்கள் மற்றும் சுயநலமானவர்கள். படுக்கை அறையில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். படுக்கையில் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவரின் கூட்டாளியை மிகவும் கவரும். இவர்கள் இயற்கையாகவே நன்றாக பேசுவார்கள் மற்றும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். தனது பேச்சுத்திறனால் எளிதில் தனக்கு பிடித்த கூட்டாளருடன் காதல் வயப்பட்டு, அவர்களை படுக்கைக்கு வரவைப்பார்களாம்.
துலாம் : இவர்கள் கவர்ச்சிகரமான ராசிக்காரர்கள். படுக்கையில் மிகவும் மென்மையாக இருப்பார்கள் மற்றும் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். இவர்கள் படுக்கையில் தனது கற்பனை திறன் அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதிகமாக காம உணர்வை துலாம் ராசிக்காரர்கள் கொண்டிருப்பதால் தாம்பத்திய உறவில் கில்லாடிகளாக காணப்படுவார்கள்.
கன்னி : இவர்கள் மற்றவர்களின் உள்ளத்தை எளிமையாக கவரக்கூடியவர்கள். தனது கூட்டாளருக்கு என்ன தேவை என்பதை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள். எனவே, தனது கூட்டாளரை தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதே போல தனது கட்டில் விளையாட்டில் புதிய உத்திகளை கண்டுபிடித்து செயல்படுத்தக்கூடியவர்கள். இவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களை எளிமையாக கவரும்.
சிம்மம் : சூரியனை போல அனைத்து விஷயங்களிலும் பிரகாசமாக விளங்குபவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள், கல்வி, தொழில், நேர்மையில் மட்டுமல்ல களவியிலும் வித்தைக்காரர்கள். சிறு இடைவெளி கிடைத்தால் கூட தங்கள் துணையை ஸ்பெஷலாக உணர வைப்பதற்கு இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்பவர்கள். தனக்கு மட்டும் அல்ல, தனது துணையின் ஆசைகளையும் கட்டிலில் நிறைவேற்றுவார்.
தனுசு : இவர்கள் மிகவும் அன்பான மற்றும் மகிழ்ச்சியான ராசிக்காரர்கள். அனைவரிடமும் பாகுபாடு இன்றி பழகுபவர்கள். இவர்கள் சாகசத்தை அதிகம் விரும்புவதால், அதையே தனது பாலுறவில் ஈடுபடுத்த விரும்புவார்கள். படுக்கையறையில் தங்கள் கற்பனைகளைக் கொண்டு வந்து உற்சாகத்தை அதிகரித்து, புதிய விஷயங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குவார்கள். தனது துணையின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.