Home /News /spiritual /

எண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும்... (மே 08, 2022)

எண் கணித பலன்: இன்று இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கும்... (மே 08, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 8ஆம் தேதியின் எண் கணிதப் பலன்கள்...

# எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் ஆளுமைக்கு எதிராக நேரம் வீழ்ச்சியடைந்து வருவதால், இது உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். அரசியல் தலைவர்களும், டீம் லீடர்களும் தற்போது வரும் வாய்ப்பை புறக்கணிக்க வேண்டும், ஏனெனில் அது கடினமான ஒப்பந்தமாகத் தெரிகிறது. பெரிதாக பண வரவு இல்லாவிட்டாலும், சிக்கல்கள் இருக்காது. இன்று வேலையை சீக்கிரம் ஆரம்பிப்பது மன உளைச்சலை தவிர்க்க உதவும். மருத்துவர்கள், ஸ்போர்ட்ஸ் டீம் கேப்டன்கள், சோலார் வணிகம், இன்ஜினியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இன்று புதிய சலுகை காத்திருக்கிறது. விவசாயம் மற்றும் கல்வி சார்ந்த தொழிலில் லாபம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

# எண் 2: (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் விசுவாசமும் நேர்மையும் வெற்றிக்கு காரணம். உங்கள் அப்பாவித்தனத்தை மக்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதால், எப்போதும் அறிவுப்பூர்வ சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏற்றுமதி இறக்குமதி, மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், டிராவல் ஏஜென்சிகள், பங்குச் சந்தை மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வெற்றி காத்திருக்கிறது. இன்று உங்கள் பங்குதாரர்கள் அல்லது நண்பர்களால் மனரீதியாக புண்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: கால்நடைகளுக்கு தண்ணீர் வையுங்கள்

# எண் 3: (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுடைய அளவு கடந்த ஆற்றலும், எல்லையற்ற செயல்திறனும் தான் நீங்கள் தொழில் முதலிடத்தில் இருக்க உதவுகிறது. உங்களுடைய ஆக்கப்பூர்வமான எண்ணமும், மயக்கும் விதத்திலான பேச்சும் உங்கள் முதலாளி மற்றும் குடும்பத்தினரை ஈர்க்கும். எல்லா சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் அளவுக்கு நீங்கள் நெகிழ்வாக இருப்பீர்கள், அதனால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. இன்று பணம் மற்றும் பொருட்களை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களும், பொது நபர்களும் புகழைப் பெறுவார்கள். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் வெற்றியையும் பண வெகுமதியையும் பெறுவார்கள். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம். இன்று சந்தனத்தை நெற்றியில் அணியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு சூரிய காந்தி எண்ணெய்யை தானமாக கொடுங்கள்

# எண் 4: (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று கையில் உள்ள பழைய வேலைகளை முடித்துவிட்டு, புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய நாள். உயர் பதவியில் இருப்பவர்கள் மேலும், மேலும் உயர வாய்ப்புள்ளது. பண விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாணவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஏற்ற நாள். விளையாட்டு வீரர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும், மேலும் உங்களுடைய செயலுக்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள். இன்றைய தினம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்கு பிசியானதாக இருக்கும், எனவே அவர்கள் குறைபட்டுக் கொண்டால் அமைதியாக கேட்டுக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: பிச்சைக்காரர்களுக்கு காலணிகளை தானமாக கொடுங்கள்.

# எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று ஒரு நிகழ்ச்சியில் தலைமை வகிக்க வேண்டியுள்ளதால், நாள் முழுவதும் அதற்காகவே செலவிட நேரும். இன்று காதலை வெளிப்படுத்த சிறந்த நாள். இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்க, உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட மற்றும் பயணத்திற்கு செல்ல சிறந்த நாள். செய்தி தொகுப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்கள் தங்களது வேலைக்காக கைத்தட்டல்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்களை தானமாக கொடுங்கள்

# எண் 6: ( நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நாள். இலக்கை நோக்கி கடினமாக உழைத்தால் மகிழ்ச்சியான பலனைத் தரும் நாள். இன்று உங்கள் செயலுக்கு காலம் துணைபுரிவதால் உங்கள் கனவுகளை நிறைவேற்ற தயாராக இருங்கள். இந்த நாளில் அனைத்து விதமான ஆடம்பரங்களையும் அனுபவிப்பீர்கள். குடும்ப பாசமும் ஆதரவும் செழிப்பை தரும். பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நாள் செலவிடப்படும். சில்லறை விற்பனையாளர்கள், ஆசிரியர்கள், நகைக்கடைக்காரர்கள், அழகுசாதன வணிகம், வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு மதிப்பீடு மற்றும் ஸ்திரத்தன்மையை அனுபவிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை புளூ
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு அரிசி தானம் வழங்குகள்

# எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களுக்கான நபர்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டிய நாள். உங்கள் பொறுப்புகளை மற்றவர்களுக்கு வழங்குவதை தவிருங்கள். உறவுகள், செயல்திறன் மற்றும் பண வளர்ச்சியை அனுபவிக்கும் நேரம் விரைவில் வரும். இன்று வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், மேலும் விளையாட்டு வீரர்கள் சச்சரவுகளைத் தவிர்க்க போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற சிவனுக்கு பூஜை செய்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 3

நன்கொடைகள்: சமைத்த அரிசி அல்லது பருப்புகளை தானமாக செய்யுங்கள்

# எண் 8: (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கான நாள் நினைத்த காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். உங்களை சுற்றியுள்ள நபர்கள் ரோல் மாடலாக நினைத்து பின்பற்றுவார்கள் என்பதால், தலைமைத்துவத்தை அனுபவிக்க வேண்டிய நேரம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். பசுமை தோட்டம் மற்றும் செடிகளை சுற்றி சிறிது நேரம் செலவிடுங்கள். தொழில் தொடர்பான உங்கள் முடிவுகள் எதிர்காலத்திற்கு சரியானதாக இருக்கும், உங்கள் வழிகாட்டியின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஏழைகளுக்கு குடை தானம் செய்யுங்கள்

# எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வங்கிகள், சமையல் கலைஞர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், மருத்துவர்கள், மருந்தாளர், அறுவை சிகிச்சை நிபுணர், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் நாள். இன்று புகழ், வேடிக்கை, ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும். உங்கள் இலக்கை நோக்கி ஒரு திசையில் செல்ல அதனை பயன்படுத்துங்கள். இன்று நிதி ஆதாயம் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும். பரஸ்பர நம்பிக்கையின் காரணமாக உறவு மேலும் வலுவடைந்து செழிப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஏழைகளுக்கு சிவப்பு மசூர் பருப்பை தானம் செய்யுங்கள்

மே 8ம் தேதி பிறந்த பிரபலங்கள்: சின்னமயானந்த சரஸ்வதி, ரெமோ பெர்னாண்டிஸ், சாய் கிரண், பி. ஆர் ஸ்ரீஜீஷ்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி