இந்த கலியுக காலத்தில் தாராள குணம் மற்றும் மனிதாபிமானம் உள்ளவர்களை காண்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது. ஏனென்றால், இன்றைய உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகமாக உள்ளது. தாராள மனப்பான்மையுள்ளவர்களை காண்பது, கிட்டத்தட்ட அறிய விஷயமாக மாறிவிட்டது. அப்படிப்பட்டவர்கள் தேவதூதர்களை போன்றவர்கள். அவர்கள் அனைத்திலும் நல்லதை மட்டுமே காண முயற்சி செய்கிறார்கள்.
ஒருவரிடம் இருக்கும் குணம், நம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி ஆகியவை அவர்களை மட்டும் அல்ல அவர்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும். அந்தவகையில், சில ராசிக்காரர்கள் மிகவும் தூய்மையான இதயத்தை கொண்டவர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என எந்த தொகுப்பில் காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள். இருப்பினும், மற்றவரின் மனநிலையை புரிந்து, அவர்களை மேம்படுத்துவதில் வல்லவர்கள். அவர்களை சுற்றி இருப்பவர்கள் சௌகரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க நினைப்பார்கள். யாராவது அவரின் கண்முன் சோகமாகவோ அல்லது மந்தமான மனநிலையில் இருந்தாலோ அவர்களை மகிழ்ச்சியான மனநிலையாக மாற்ற முடியும்.
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் நகைச்சுவை மற்றும் அக்கறையால் எல்லா சூழ்நிலையையும் ஒளிரச் செய்வார்கள். அவர்கள் நியாயமானவர்கள் மற்றும் யாரை பற்றியும் விமர்சிப்பதில்லை, அதிகமாக இறக்க குணம் உள்ளவர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவிகரமானவர்களாக இருப்பதால், உண்மையான தேவதை ஆன்மாக்களாக கருதப்படுகிறார்கள். ஒருவர் பதட்டத்திலோ அல்லது வலியிலோ இருக்கும் போது, துளியும் யோசிக்காமல் அவர்களின் பிரச்சனையை சரி செய்வார்கள். அவர்கள் தங்களின் உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்வார்கள். ஏனென்றால், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதில்லை.
Also Read | மிதுனத்தில் செவ்வாய்: அடுத்த 69 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
தனுசு
தனுசு ராசியினர் உண்மையாகவே தேவதையின் ஆன்மாக்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழவும், தங்களை சுற்றி இருப்பவர்களையும் அதிகம் விரும்புபவர்கள். அதுமட்டும் அல்ல, தாராள மனப்பான்மை கொண்டவர்கள், எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுபவர்கள். சுயநலமாக இவர்கள் ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள். மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண விரும்புபவர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். ஆனால், எப்போதும் அன்பான மற்றும் கனிவான இதயம் கொண்டவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுவது தான். எனவே, பெரும்பாலும் சமூக நலனுக்காக வேலை பாடுபடுவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல அந்தஸ்து இருக்கும். அன்பாகவும், கனிவாகவும் இருப்பதோடு, மக்களின் பிரச்சனைகளை கூறாமலேயே புரிந்து கொள்ளும் வல்லமை கொண்டவர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் உண்மையாகவே தேவதை ஆன்மாக்கள். ஏனென்றால், இவர்கள் கண்ணியமான, அன்பான இதயம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள். அனைவரிடத்திலும் அனுதாபமாக இருப்பவர்கள். அனுதாபம் இவர்களின் பிறவி குணத்தில் ஒன்று. இவர்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் ஒருவரைப் பார்க்கும்போது, அவர்களுக்கு உதவுவதை தங்கள் கடமையாக நினைக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Zodiac signs