Home /News /spiritual /

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இவர்கள் மட்டும்தான் செல்ல முடியும்...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இவர்கள் மட்டும்தான் செல்ல முடியும்...

திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அவ்வப்போது தேவைக்கேற்ப சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை நகரில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  வீதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில்,  ”திங்கட்கிழமையான இன்று முதல் 14-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை சாமி மாட வீதி உலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்” என்றார்.

    மேலும் படிக்க... இந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் தரக்கூடாது.. காராணம் தெரியுமா?

    மேலும் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருபவர்கள், கட்டாயமாக 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான ஆதாரமாக சான்று அல்லது மொபைலில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இதற்கு கண்டிப்பாக பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி 2022 எப்போது? நேரம் தேதி குறித்த தகவல்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி