Home /News /spiritual /

Money and Spirituality | செல்லும் வழியில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம்?

Money and Spirituality | செல்லும் வழியில் பணம் கிடைத்தால் என்ன அர்த்தம்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money and Spirituality | சாலையில் நாணயங்களை கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்கொள்வீர்கள் என்று அர்த்தம்...

    பலருக்கும் தங்கள் செல்லும் வழியில் ரூபாய் நோட்டுகள் அல்லது சில்லறைகள் சாலையில் தட்டுப்படும். சாலையில் அல்லது நீங்கள் செல்லும் வழியில் ரூபாய் நோட்டுகள் அல்லது காசுகள் கிடக்கும் பொழுது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமாக சிந்திப்பார்கள். ஒரு சிலர் அதை கவனிக்காமல் கடந்து செல்வார்கள். ஒரு சிலர் கவனித்தும் அமைதியாக கடந்து சென்று விடுவார்கள். ஒரு சிலர் அது யார் தவிர விட்டார்களோ என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். யாரோ ஒருவர் தவறவிட்ட அல்லது தொலைத்த பணத்தை சாலையில் இருந்து நிச்சயமாக எடுக்கக்கூடாது. ஆனால் நீங்க செல்லும் வழியில் பணம் இருக்கிறது என்பதற்கு ஆன்மீக ரீதியான அர்த்தம், பிரபஞ்சத்தின் அறிகுறி என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பணம் என்பது ஆட்சி, அதிகாரம் மதிப்பு மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒவ்வொரு நபருமே பணம் என்பதை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். உலகின் ஒருசில நாடுகளில் பணம் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன.

    உதாரணமாக ரூபாய் நோட்டோ அல்லது ஒரு நாணயமோ பல ஆண்டுகளாக பல்வேறு நபர்களின் கைகளில் புழங்கும், ஒரு நபரிடம் இருந்து வேறு நபருக்கு மாறும் பொழுது, அந்த நபரின் ஆற்றலும் மற்றொரு நபருக்கு வழங்கப்படுகிறது. எனவே ஆற்றலின் தலைமையிடமாக பணம் தான் என்பதை பல நாடுகள் கருதுகிறது.

    சாலையில் பணத்தைக் கண்டறிவதன் அர்த்தம் என்ன?

    ஆனால் ஸ்பிரிச்சுவல் ரீதியாக அதாவது ஆன்மிக ரீதியாக பணத்துக்கு என்ன பொருள்? மிகவும் எளிமையான சொல்ல வேண்டுமென்றால் பணம் என்பது மதிப்பைக் குறிக்கும். ஒவ்வொருவரின் பார்வையிலும் பணம் ஏதோ ஒரு மதிப்பைப் பெற்றுள்ளது.

    எனவே அதனுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் பொழுது நீங்கள் செல்லும் வழியில் பணத்தைக் கண்டறிந்தால் இந்த உலகில் மட்டுமல்ல, இறை உலகிலும் உங்கள் மீது பலருக்கும் மரியாதை இருக்கிறது என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது. அதாவது தேவதை எண்கள் என்று சொல்வது போல தான் இந்த பணம் கிடைப்பதும். பணத்தை நீங்கள் கண்டறிவது என்பது, உங்கள் மதிப்பை நீங்கள் கண்டறிவது போல. எனவே, உங்கள் உதவியை தேடி ஒரு சிலர் வருவார்கள்  என்பதே பிரபஞ்சத்தின் அறிகுறியாகும்.

    மதிப்பு மரியாதை என்பதைத் தவிர்த்து, பணத்தை சாலையில் கண்டறிவது பல்வேறு அறிகுறிகளையும் குறிக்கிறது.

    சாலையில் நாணயங்கள் / சில்லறைக் காசுகளைக் கண்டால் என்ன அர்த்தம்?

    சாலையில் நாணயங்களை கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்கொள்வீர்கள். நீண்ட ஆயுள் மற்றும் நீங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை அடைவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதன் அர்த்தமாகும்.அது மட்டுமின்றி, நீங்கள் நாணயங்கள் அல்லது காசுகளை சாலையில் பார்க்கும் பொழுது பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களை வெற்றியை நோக்கி கொண்டு செல்கிறது. எனவே நீங்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அது மட்டுமின்றி நாணயங்கள் என்பது இணைந்து இருப்பது என்பதையும் குறிக்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய நெருக்கமான உறவுகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

    சாலையில் ரூபாய் நோட்டு அல்லது நோட்டுக்களைக் கண்டால் என்ன அர்த்தம்?

    நாணயங்களுக்கு மாற்றாக ரூபாய் நோட்டுகளையும் சாலையில் காண்பீர்கள். ஒருவேளை நீங்கள் ரூபாய் நோட்டுகளை உள்ளது ரூபாய் நோட்டை சாலையில் கண்டால் உங்களுடைய பயத்தை நீங்கள் வெளியேற்ற வேண்டும். அதுமட்டுமின்றி உங்களுடைய உள்ளுணர்வை எப்பொழுதுமே நம்ப வேண்டும். அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை சரியானது தான் எனவே தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரபஞ்ச ஆற்றல் உங்களுக்கு தேவையான வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதை சாலையில் நீங்கள் பணத்தைக் கண்டெடுப்பது மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    Also see... Lunar Eclipse 2022: சந்திர கிரகணம் தேதி, நேரம் குறித்த முழு தகவல்கள்...

    பொதுவாக நீங்க சாலையில் பணத்தை கண்டறிந்தால் அல்லது எதிர்பாராத இடத்தில் பணத்தை கண்டறிந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை இங்கே பார்க்கலாம்.

    1. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் சாலையில் பணம் ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை பார்த்தால் இறையருள் உங்களுக்கு இருக்கிறது என்றும் விரைவிலேயே மிக நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்றும் அர்த்தம்.

    2. நீண்ட காலமாக காத்திருக்கும் விஷயம் எதிர்காலத்தில் நடக்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது.

    3. மெட்டல் அதாவது உலோக நாணயங்கள் உங்கள் கண்களில் பட்டால் உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் உள்ளது என்று பொருள்.

    4. பலரின் கைகளால், பலராலும் பயன்படுத்தப்பட்ட நாணயம் உங்களுக்குக் கிடைத்தால், அதை எடுத்து வைத்துக் கொள்ளலாம். அது உங்களுக்கு பாசிடிவ் எனர்ஜி மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரும்.

    5. கத்தையாக அல்லது பர்ஸ் நிறைய பணம் கிடைத்தால், பூர்வீக சொத்து கிடைக்கும் என்று அர்த்தம்.

    6. குழப்பத்தில் இருக்கும் போது ரூபாய் நோட்டை பார்த்தால், குழப்பம் தீரும் என்று அர்த்தம்.

    சாலையில் நம் கண்ணில் படும் சில்லறைகளோ அல்லது நோட்டுக்களோ நமக்கு சொந்தம் இல்லாதவை அவற்றை உரியவரிடம் கொண்டு சேர்ப்பதே அறம். அதை அதிர்ஷ்டம் என வைத்துக்கொள்வது அறம் இல்லை.  மேற்கண்ட கட்டுரையில் பணத்தை பார்த்தால் என்ன அர்த்தம் என்று தான் கூறப்பட்டுள்ளது. கண்டெடுக்கும் பணத்தை உரிமைக்கொண்டாட சொல்லவில்லை. சாலையில் பெரிய தொகையை கண்டெடுக்க நேர்ந்தால் அதனை அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைப்பதே நல்லது. இதனால் வீண் பிரச்னைகளில் நாம் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்கலாம். மற்றவருக்கு உதவி செய்த திருப்தியும் நமக்கு கிடைக்கும்..
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Money

    அடுத்த செய்தி