• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • எலுமிச்சையின் ஆன்மீக மகத்துவம்!

எலுமிச்சையின் ஆன்மீக மகத்துவம்!

தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது காரில் மட்டும் அல்ல கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

  • Share this:
எலுமிச்சையை சாஸ்திரங்கள் 'தேவ கனி' என்றே விவரித்து சிறப்பிக்கிறது. அதனால், தான் தாந்த்ரீக சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலக சக்தியான ஆதி சக்திக்கு எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய ஆவிகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு என்பது ஆன்மீக வாதிகள் சிலர் கருத்து.

தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது காரில் மட்டும் அல்ல கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. உடல் சோர்வு கொண்டவர்களுக்கு எலுமிச்சையின் வாசனை புத்துணர்ச்சி தரக்கூடியது. எலுமிச்சை ஈசனின் வடிவம் என்றால், அதில் உள்ள மஞ்சள் சக்தியின் வடிவம். மொத்தத்தில் எலுமிச்சை சிவ சக்தியின் உருவம் கொண்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க... ஆடி வெள்ளியில் அம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றுவது ஏன்?

அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ தீய சக்திகளை அகற்ற உடன் எலுமிச்சையை எடுத்துச் செல்வது நல்லது. மேலும் நாம் செல்லும் வாகனங்களின் 4 டயர்களிலும் எலுமிச்சையை வைத்து காவு கொடுத்து விட்டு சென்றால் மிகவும் சிறப்பு.



அதோடு, வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், ஏதேனும் நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும் போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து எலுமிச்சையை சுற்றி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள் என்பதும் ஐதீகம். இந்த முறை இன்றும் கிரமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் படிக்க... தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை விரதம்!

சென்னையில் பாடிகாட் முனீஸ்வரன் என்ற கோயில் உள்ளது. அனைவருக்குமே அந்தக் கோயிலை தெரியும். தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கு அமாவாசை தினங்களில் கார் ஷோ ரூம் போல வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை சிலர் பார்த்து இருக்கலாம். அங்கு பூசாரி எலும்பிச்சை வைத்து பூஜை போட்டால் அந்த வண்டியில் விபத்து ஏற்படாது என்பது மக்கள் நம்பிக்கை. அதாவது முனீஸ்வரனே தங்களுக்கு பாடிக்காட்டாக வந்து காப்பார் என்று மக்கள் நம்புகின்றனர். ஆக, அவரவர் மனத் திருப்திக்கு ஏற்ப பூஜை செய்து கொள்கின்றனர். இதில் ஒரு முறை அல்லது வழக்கம் என்பதெல்லாம் இல்லை. பூஜை செய்யும் சமயத்தில் உங்களுக்குள் ஒரு நம்பிக்கை வருகிறதா? மனபாரம், பயம் காணாமல் போகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: