ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தமிழ் ஞானப்பழம் நீயப்பா! பழனி திருக்கோவிலின் தல வரலாறு...!

தமிழ் ஞானப்பழம் நீயப்பா! பழனி திருக்கோவிலின் தல வரலாறு...!

பழனி முருகன்

பழனி முருகன்

Murugan Temple Palani | தமிழ் மூதாட்டி அவ்வை “பழம் நீ - ஞானவடிவம் நீ” என்று பாடிய இடம் இது. அதுவே பின்னர் பழனியாகிற்று.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருஆவினன்குடி, தென் பொதிகை என்றெல்லாம் அழைக்கப்படும் முருகன் கோவில் இது, பழனி என்று அனைவரும் கொண்டாடும் இத்திருத்தலம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்!

  பழனி திருக்கோவில் தல வரலாறு:

  புராண கதைகளின் படி நாரதர் அளித்த ஞானப்பழத்தை பெறும் போட்டி முருகனுக்கும் அவன் அண்ணன் கணேசனுக்கும் நடந்தது, போட்டியில் உலகை முதலில் சுற்றி வர சென்றார் முருகன், அண்ணன் யான்முகனோ அம்மை அப்பரே உலகம் என்று பழத்தை பெற்றார். திரும்பி வந்த முருகன் சினந்து சீறி வந்த நின்ற இடம் இந்த இடம். அன்னை பார்வதி எவ்வளோ கெஞ்சியும் முருகன் இங்கிருந்து கிளம்பவில்லை. பின்னர் வந்த தமிழ் மூதாட்டி அவ்வை “பழம் நீ - ஞானவடிவம் நீ” என்று பாடிய இடம் இது. அதுவே பின்னர் பழனியாகிற்று.

   பழனி மலை - இடும்பன் மலை:

   அகஸ்தியாரின் சீடன் என்று சொல்லப்படும் இடும்பாசுரன் கயிலாயம் சென்று பிரம்மதண்டத்தில் இருபுறம் சக்திகிரி,சிவகிரி என்னும் இருமலைகளை கட்டி தோளில் தூக்கி வந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருள் செய்ய நினைத்த முருகன், இப்பகுதியில் அரசனாக சென்று இளைப்பாறி செல்லும் படி சொன்னார்.

  இடும்பன்

  கீழ் இறக்கி வைத்த மலை “காவடியை” மீண்டும் எடுக்க இயலவில்லை. முருகனுடன் சண்டையிட்டு தோற்றான் இடும்பன். அவனை தனக்கு காவலாக அமர்த்தி அழகு பார்த்தார் கந்தன். இடும்பனை போல் தனது சந்நிதிக்கு காவடி எடுத்து வருவோர்க்கு அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்று துவங்கியது தமிழுலகில் காவடி வழக்கம். மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் வழியில் உள்ள இடும்பனை முதலில் வணங்கி பின்னர் மலையில் முருகனை வணங்க வேண்டும்.

  Also see... நவபாஷாணம் என்றால் என்ன? பழனி முருகன் சிலையில் ஏன் நவபாஷாணம் வைக்கப்பட்டது தெரியுமா?

  பழனி சிலை - சித்தர் கலை:

  தமிழ் சித்தர்களின் ஒருவரான போகர் பார்வதி, முருகன், தலனை சித்தர் அகத்தியர் உத்தரவில் இங்கு முருகன் சிலையை செய்ய தொடங்கினார். 81 சித்தர்கள் போகர் வழிகாட்டுதலில் சிலையினை செய்ய உதவினர். 9 ஆண்டுகள் பல்லாயிரம் மூலிகைகள் கொண்டு முருகன் சிலையை போகர் நிறுவினார். இம்முருகன் மீது அபிஷேகம் செய்யப்படும் விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் எவ்வகை நோய்களும் அருமருந்து என்பது சித்தர் வாக்கு. பலருக்கு இன்றும் அது பலித்தும் வருகிறது. சிலையில் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரும் கிளி வடிவில் இருக்கிறார்.

  சரவணப்பொய்கையில் நீராடி, அடிவாரத்தில் உள்ள ஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்த பால வேலாயுத ஸ்வாமியை வணங்கி மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்தலத்தின் தல விருட்ஷம் நெல்லி மரம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்திற்கு பல்வேறு போக்குவரத்து வசதிகள், மலையேற ரோப்கார் வசதிகளும் உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.

  நெற்றியிலே நீறணிந்து நெறியாக உன்னை நினைந்து

  பற்றினேன் உள்ளமதில் உன்னடி பழநி முருகா!

  - விஷ்ணு நாகராஜன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Murugan temple, Palani, Palani Murugan Temple