ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலையில் தாரகாசூரன் வதம்.! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.!

தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலையில் தாரகாசூரன் வதம்.! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.!

கழுகுமலை

கழுகுமலை

Kalugumalai Murugan Temple | வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்திலேயே கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாளில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை, கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா...” முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்கு பழைமை வாய்ந்த அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் உள்ளது. குடவரைக்கோயிலான இக்கோயிலுக்கு விமானமோ கோபுரமோ கிடையாது. மலைதான் விமானமாகவும் கோபுரமாகவும் உள்ளது. இங்குள்ள கழுகாசல மூர்த்தி, ஒரு முகமும் ஆறு கரங்களும் கொண்டு அருள்பாலிக்கிறார்.

தென்னிந்தியாவிலேயே முருகப் பெருமானுக்கு இதுமாதிரியான திருக்கோலம் வேறெந்த தலத்திலும் இல்லை. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்று. வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு, கந்த சஷ்டி விழா கடந்த 25 ம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் 5-வது நாளான இன்று மதியம் தாரகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி கழுகாசலமூர்த்தி சம்ஹாரத்துக்கு கோயிலில் இருந்து எழுந்தருளினார். முருகப் பெருமானுடன் தராகசூரனாகப் போர்புரிய, பரம்பரையாக சஷ்டி விரதமிருந்த பக்தர் ஒருவர், மரத்தினாலான யானை முகத்தை தன் முகத்தோடு பிடித்தபடி, 3 முறை முருகப் பெருமானின் சப்பரத்தைச் சுற்றி வந்தார். மூன்றாவது சுற்றின் முடிவில், தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வதம் செய்யும் விதமாக, அந்தப் பக்தர் பிடித்துள்ள யானை முகமுடி, வேலில் கட்டப்பட்டு தூக்கப்பட்டது.

பின்னர், அப்படியே சாய்ந்த அந்தப் பக்தர் தரையில் படுக்க வைக்கப்பட்டார். தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தெப்பக்குளத்தில் குளிப்பாட்ட தூக்கிச் செல்லப்பட்ட அந்தப் பக்தர், மீண்டும் முருகப் பெருமானை தரிசித்து விபூதி பெற்றார். இதனால், தாரகாசூரன் முருகப் பெருமானிடம் விமோசனம் பெற்றதாக ஐதிகம்.  முதல் வெற்றி முழு வெற்றி என்பதால்தான் முதல்நாள் பஞ்சமி  திதியில் தாரகாசூரனின் வதம் நடக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

Also Read : மாமனும் மருமகனும் மருவும் மதுரை மலை - பழமுதிர்சோலைமலை திருத்தலம், வரலாறு, சிறப்பு

கந்த சஷ்டியின் 6-வது நாளான நாளை  மாலை, வழக்கமாக மற்ற முருகன் தலங்களில் நடைபெறுவதுபோல, சூரபதுமன், சிங்கமகாசூரன், தாரகாசூரன், வானுகோபன், தர்மகோபன் ஆகிய 5 அசுர சகோதர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Published by:Murugesh M
First published:

Tags: Kandha Sashti, Kovilpatti, Murugan temple, Tamil News