முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு.. இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தம்..!

பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு.. இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தம்..!

பழனி தங்க தேர்

பழனி தங்க தேர்

Palani Temple | பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் சார்பில் தங்கத் தேர் புறப்பாடு  இன்று முதல் பிப். 6 ம் தேதி வரை தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும்,  காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.  நாள்தோறும் அருள்மிகு முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் ரத வீதி உலா எழுந்தருள்கிறார்.

அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வீணை இன்னிசை என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. பழனி மலைக் கோயிலில் நேற்று திருக்கோயில் சார்பில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்றது.  தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை தங்க தேர் புறப்படு ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருவிழா திருத்தேரோட்ட நிகழ்ச்சி நான்கு ரத வீதியில் நடைபெற உள்ளது.

First published:

Tags: Gold, Murugan, Palani