முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தாலி கயிற்றை மாற்ற வேண்டிய நாட்கள் எது? எந்த நேரத்தில் மற்றலாம்?

தாலி கயிற்றை மாற்ற வேண்டிய நாட்கள் எது? எந்த நேரத்தில் மற்றலாம்?

தலி கயிறு

தலி கயிறு

Thali Kayiru changing Procedure | தாலி கயிற்றை மாற்ற வேண்டிய நாட்கள் எது? அதனை எப்படி மாற்ற வேண்டும்? யாரை வைத்து மாற்றல்லாம்? முக்கியமாக தாலி கயிறு மாற்றும் போது என்ன செய்யக்கூடாது என விளக்குகிறார் அனிதா புஷ்ப்பவனம் குப்புசாமி...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருமாங்கல்யத்தை சிலர் மஞ்சள் கயிரில் அணிகின்றனர். சிலர் தங்கத்தில் அணிகின்றனர். அந்த தாலி கயிற்றை வருடத்திற்கு 2 முறை மாற்றுவது வழக்கம். முக்கியமாக ஆடி பெருக்கு நாளில் மாற்றுவார்கள். அதனைவிட்டால் எப்போது மாற்றலாம்? எப்படி மாற்ற வேண்டும் என்பது பலருக்கும் இருக்கும் சந்தேகம். தாலி கயிறு மாற்றுவதற்கு நாள் கிழமை போன்றவை பார்க்க வேண்டுமா எனவும் பலரும் கேட்பார்கள். இது குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கிறார் அனிதா குப்புசாமி.

அவர் கூறுகையில், ”உண்மையில் தாலி கயிறு மாற்ற நாள், கிழமை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தாலி கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்றுஎல்லாமே கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும்.தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்.

உங்களுடைய தாலிக்கயிறு அல்லது தாலி சரடை மாற்றும் பொழுது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்ற வேண்டும். அதுபோல் தாலிக்கயிறு மாற்றும் பொழுது உங்கள் கணவர் அல்லது சுமங்கலியாக இருக்கும் அம்மா, மாமியார் இப்படி வயதானவர்கள் யாராவது மட்டுமே உங்கள் உடனிருக்க வேண்டும். வேறு யாரையும் அருகில் வைத்திருக்க கூடாது.

மேலும் படிக்க...  சுப முகூர்த்த நாட்கள் 2021-2022:திருமணம்,நல்ல காரியம் செய்ய உகந்த நாள்

அதுபோல ஒருமுறை தாலிக்கயிறு மாற்ற உட்காரும் பொழுது முடியும்வரை எழுந்திருக்க கூடாது. தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள்.

திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ இவைகளையெல்லாம் ஒரு தட்டில் எடுத்து உங்கள் அருகில் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் கர்ப்பிணிகள் மாற்ற கூடாது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பிறகே மாற்ற வேண்டும். மற்றபடி யார் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

' isDesktop="true" id="698391" youtubeid="u3a3_MJ-OA4" category="spiritual">

காலையில் பிரம்ம மூகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு திருமாங்கல்யத்தை மாற்ற வேண்டும். அதன் பிறகு மஞ்சள் குங்குமம், பூ அனைத்தும் வைத்துவிட்டு தாலிக்கும்

மஞ்சள் குங்குமம் வைத்து விட்டு நேராக உங்கள் பூஜை அறைக்கே சென்று சாமியை வணங்கிவிட்டு அதன்பிறகு உங்கள் காலை உணவை உண்ண வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று மாற்றினால் இன்னும் சிறப்பு.

மேலும் படிக்க... திருப்பதியில் வேண்டுதலுக்காக திருமாங்கல்யத்தை (தாலி) கழட்டி உண்டியலில் போடலாமா?

இனி திருமணம் செய்ய சுப முகூர்த்தத்தை நீங்களே கணிக்கலாம்..

நீங்கள் அணிந்திருந்த பழைய கயிற்றை செடி, கொடிகள் இருந்தால் அதில் கட்டிவிடலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள மரங்களில் கட்டிவிடலாம். வெளியில்

குப்பையில் தூக்கி போடாதீர்கள். ஆகையால் இந்த நாளில் உங்கள் தாலிக்கயிற்றை மாற்றி எல்லா செல்வங்களையும் வளங்களையும்  பெற்று வாழுங்கள்” இவ்வாறு கூறினார்.

First published:

Tags: Hindu Temple, Pushpavanam kuppusamy