Thaipusam 2022 : திருமண தடையை நீக்கும் தைப்பூசம்...
Thaipusam 2022 : திருமண தடையை நீக்கும் தைப்பூசம்...
பெண்குயின் கார்னர்
Thaipusam 2022 : திருமண தடை நீங்கி கல்யாண வரம் பெற தைப்பூசதன்று விரதம் இருங்கள். இதனால் செவ்வாய் தோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் உள்ளவர்களுக்கும் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
முருகனை தமிழ்க்கடவுள் என்று தமிழர்கள் சொந்தம் கொண்டாடி மகிவர். முருகன் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக் கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று (18.1.2022) தைப்பூசம். இந்த நாள் முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையாகவே அமைந்திருப்பது விசேஷம். செவ்வாய் பகவானின் அனுகிரகம் கிடைக்க நாம் வணங்க வேண்டியது முருகப்பெருமானையே. முருகனுக்கு உகந்த நாளாகவும் செவ்வாய்க்கிழமை விளங்குகிறது.
மேலும் தைபூசம் என்பது முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்ட நாளாகும். எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும், முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கிய நாள் தைப்பூசம். முருகன் தேவியிடமிருந்து பெற்ற அந்த வேல் 'பிரம்ம வித்யா' சொரூபமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசம் செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் விஷேசம் ஆகும். செவ்வாய் கிழமை முருகனுக்கு உகந்த நாள். தைப்பூசமும் முருகனுக்கு உகந்தநாளாகும். எனவே திருமண தடை நீங்கி கல்யாண வரம் பெற தைப்பூசதன்று விரதம் இருங்கள். இதனால் செவ்வாய் தோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் உள்ளவர்களுக்கும் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
அதுபோல வரன் பேச ஆரம்பிக்கும் நபர்களும் இன்றுமுதல் தொடங்கினால் உடனே திருமணம் நடக்கும் நல்ல வரன் அமையும் என்பதும் ஐதீகம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.