முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இத்தனை கோடி ரூபாயா?... பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் விவரம்..!

இத்தனை கோடி ரூபாயா?... பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் விவரம்..!

பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல்

பழனி முருகன் கோவில் உண்டியல் வசூல்

Palani murugan temple | பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கை விவரம் வெளிவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Palani, India

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  கொண்டாடப்பட்ட தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் மலைக்கோவில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 

அதில் பக்தர்கள் காணிக்கையாக நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை செலுத்தினர். அதனை தொடர்ந்து உண்டியல் காணிக்கை கோயில் ஊழியர்களால் தரம் பிரித்து எண்ணும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் மொத்தமாக ரூ. 7,17,42,126, தங்கம் 1,248 கிராம், வெள்ளி 48,277 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2,529 கிடைத்துள்ளன.

Also see... திருப்பதி செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு...!

பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

First published:

Tags: Murugan temple, Palani, Palani Murugan Temple, Thaipusam