சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் முருகன் மீது இருந்த தீராத அன்பினால் அகத்தியர் முருகன் மந்திரம் அருளினார்...
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால் குரு பகவானின் அருள் கிடைக்கும், செவ்வாய் தோஷம் விலகும். அதோடு நமது நாக்கில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் சத்திய வாக்காக இருக்கும். நமது எண்ணமும் செயலும் நன்னெறிகளை நோக்கி இருக்கும். இதன் காரணமாக சமுதாயத்தில் நமக்கான ஒரு அறிய இடம் கிடைக்கும். நமது நிலையானது படிப்படியாக உயரும். நம் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படும்.
மேலும் படிக்க...தைப்பூச திருவிழா... தைப்பூசம் சிறப்பு முருகன் பாடல்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.