Home /News /spiritual /

Thaipusam 2022 : தைப்பூச திருவிழா... தைப்பூசம் சிறப்பு முருகன் பாடல்கள்...

Thaipusam 2022 : தைப்பூச திருவிழா... தைப்பூசம் சிறப்பு முருகன் பாடல்கள்...

Thaipusam 2022 : சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கடவுளாக முருகப்பெருமான் உள்ளார்.

    தைப்பூச திருநாள் தான் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்ற திருவிழாவாகும். தைப்பூச திருநாள் அன்று சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்களோடு வெளிநாட்டவர்களும் அலகு குத்திக் கொண்டும் காவடி எடுத்துக் கொண்டும் வந்து முருகனை தரிசிப்பதுண்டு. தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்த்ரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன், அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, நமக்கு அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் என்பது ஐதீகம்.

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது இந்துக்கள் அனைவருக்கும் தெரியும். தன்னை சரணடைந்து கரம் கூப்பி வணங்கினால், அடுத்த கனமே யாமிருக்க பயமேன் என்று நேரில் காட்சி கொடுப்பான் கலியுக வரதனான கந்தன். முருகனை வணங்கினால் அனைத்து கடவுள்களையும் வணங்கியதாக அர்த்தமாகும்.

    அதனால் தான் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான கடவுளாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தத்துவத்தை உணர்த்தவே, அறுபடை வீடுகளிலும் ஆறு கோலத்தில் காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறார்.

     மேலும் படிக்க... இன்று தைப்பூசம்.. விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thaipusam

    அடுத்த செய்தி