திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு மலைக்கோயில் பூட்டப்பட்டதால் கிரிவலப்பாதையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்து பெற்ற கோவில்களில் பழனியும் ஒன்று. கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றாலும், கிரிவலப் பாதையில் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் எந்த ஒரு நிகழ்வுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் கோயில் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள், சாலையோர கடைக்காரர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் வேலைக்காரர்கள் முக கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினிகள் இன்றி செயல்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று நியூஸ் 18 தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது.
அதனைதொடர்ந்து பழனி தேவஸ்தான ஊழியர்கள், அறநிலை துறையினர், காவல் துறையினர் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் கடைக்காரர்கள் கடை ஊழியர்கள் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதத் தொகையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.