தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த விழாதை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி செவாய்க்கிழமையான இன்று ஜனவரி 18ஆம் தேதி 2022 அனைத்து முருகன் ஆலயங்களிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
தைப்பூசம் அன்று முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது. நன்மைகள வந்து சேரும் என்பது ஐதீகம்.
முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும். தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு, சோறு ஊட்டுதல், காதுகுத்துதல், மொட்டை அடித்தல் என போன்ற நற்காரியங்களை செய்யலாம்.
Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்.. (ஜனவரி 18, 2022)
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும். இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும். எந்த தடைகளும் வராது.
மேலும் படிக்க... Thaipusam viratham 2022 | தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thaipusam