முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தைப்பூச திருவிழா... பழனி உள்பட முருகன் கோவில்களில் கோலாகல கொண்டாட்டம்..!

தைப்பூச திருவிழா... பழனி உள்பட முருகன் கோவில்களில் கோலாகல கொண்டாட்டம்..!

தைப்பூச திருவிழா

தைப்பூச திருவிழா

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு தனிச் சிறப்பாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் தேரில் முத்துக்குமாரசாமி எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் ரத வீதிகளிலும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, முருகப்பெருமானை வணங்குகின்றனர். பழனிக்கு பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் முருகனை நினைத்து காவடி சிந்து பாடி வருகின்றனர்.

முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. இதையொட்டி முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Murugan, Murugan temple, Thaipusam