முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தை மாத வளர்பிறை பிரதோஷம்... நந்திதேவரை இப்படி வணங்கினால் பலன்கள் தேடிவரும்!

தை மாத வளர்பிறை பிரதோஷம்... நந்திதேவரை இப்படி வணங்கினால் பலன்கள் தேடிவரும்!

நந்தி தேவர்

நந்தி தேவர்

Thai Pradosham 2023 | ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிவன் கோயில் உள்ள நந்திக்கு பூஜை செய்வது பெரும் பலன் அளிக்கும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகள் ஏராளம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். திதிகளில் சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது. திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் நாளை தை மாத வளர்பிறை பிரதோஷம்.

நந்தி வழிபாடு

நந்தி பகவான் என்பது சிவபெருமானின் வாகனம். இவர் சிவனோடு இருப்பவர் என்பதால் அவரை தரிசனம் செய்வது சிவதரிசனம் செய்ததற்கு சமம். கோவிலில் சிவனை நந்திக்கு பின் நின்று வணங்க வேண்டும் என்ற ஐதீகம் உண்டு.  இந்த நிலையில் நந்தியை முதலில் வழிபட்டு விட்டு தான் மற்ற கடவுளை வணங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரதோஷ நாளில், சிவனோடு சேர்த்து நந்திதேவரையும் வில்வம் சார்த்தி, அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நன்மைகளையும் நல்ல விஷயங்களையும் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெருமாள் அலங்காரப் பிரியன், சிவபெருமான் அபிஷேகப் பிரியன். ஆகவே, லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்வது நல்லது.

வெள்ளி பிரதோஷம் சுக்கிர யோகம் தரும்

நாளை வெள்ளி கிழமை. வெள்ளி கிழமையில் வரும் பிரதோஷம் விஷேசமானது. சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவனாருக்கு நடக்கும் பூஜைகளை தரிசிக்க வேண்டும். இதனால், உறவுகள் பலப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தை பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்து, சிவனருளைப் பெறுவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குவதும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வதும் நல்லது.

First published:

Tags: Thai Month