Home /News /spiritual /

பௌர்ணமியில் சிவாலயங்களுக்கு சென்று விளக்கேற்ற ஆயுள் விருத்தி உண்டாகும்...

பௌர்ணமியில் சிவாலயங்களுக்கு சென்று விளக்கேற்ற ஆயுள் விருத்தி உண்டாகும்...

தை திங்கள் பௌர்ணமி தினத்தில் சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்ற ஆயுள் விருத்தி உண்டாகும். சிவ ஆலயங்களுக்குச் செல்வதும், முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வர எல்லா துன்பங்களும் விலகி, தன, தானிய, செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்...

மேலும் படிக்கவும் ...
    ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்தவகையில் இந்த தை மாதத்தில் திங்கட்கிழமை அன்று வருகிறது.

    திங்கட்கிழமை அன்று வரும் பௌர்ணமி நன்னாளில் சந்திர தசை உள்ளவர்கள், கடக ராசிக்காரர்கள், திருவோணம், அஸ்தம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிற அல்லது ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து வந்தால் சங்கடங்கள் தீர்ந்து சுபகாரியங்கள் கைகூடும். வெளிநாடு செல்வதில் தடை இருந்தால் தீரும். வாழ்வில் சகல செல்வ வளங்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம். மேலும் திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய நாள்.. இந்தநாளில் சிவாலயம் சென்று விளக்கேற்ற ஆயுள் பலம் உண்டாகும்.

    மேலும் பௌர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற முடியும்.

    பௌர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறை மேற்கொள்வது சிறப்பு. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் வீட்டிலேயே இருந்து பெளர்ணமி வழிபாடு நடத்துவது நல்லது...

    வீட்டில் வழிபடும் முறையும் பலன்களும்

    மாதத்தில் ஒரு முறை வரும் பௌர்ணமி தினத்தன்று பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிட்டும். அத்துடன்  நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள்...

    அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.

    மேலும் படிக்க..12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Amman Thayee, Sivan, Temple

    அடுத்த செய்தி