Home /News /spiritual /

தை மாத தேய்பிறை சிவராத்திரி... சிவனை வழிபட்டால் நன்மை உண்டாகும்...

தை மாத தேய்பிறை சிவராத்திரி... சிவனை வழிபட்டால் நன்மை உண்டாகும்...

சிவன்

சிவன்

தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும்.

மேலும் படிக்கவும் ...
    அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்று சிவபெருமான் சொன்னதாக புராணங்கள் தெரிவிக்கைன்றன. மேலும் சிவபெருமானை மகா சிவராத்திரி அன்று மட்டும் இல்லாமல் மாதம் தோறும் வரும் சிவராத்திரி நாள்களிலும் வழிபடுவதால் அளவற்ற நன்மைகளை நாம் பெறலாம்.

    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும். அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும். அதில் மாதம் தோறும் வரும் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். அன்றையதினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும். ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும். முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சிவராத்திரி என்றால், நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஏதாவது ஒரு சிவராத்திரி விரதம் இருந்தால் போதும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்.

    அதேபோல மார்கழி மாத வளர்பிறை சதுர்த் தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்.

    ஓராண்டில் வரக்கூடிய சிவராத்திரிகள்:



     1. நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.



    2. மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.




     3. பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.




     4. யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.



    சிவராத்திரியில் சிவனை வழிபட்டவர்கள்


    1. சித்திரை மாதம் :


    இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியால் வழிபடப்பட்டது.


    2. வைகாசி மாதம் :


    வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவானால் வழிபடப்பட்டது.


    3. ஆனி மாதம் :


    வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசனால் வழிபடப்பட்டது.


    4. ஆடி மாதம் :


    தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.


    5. ஆவணி மாதம் :


    வளர்பிறை-அஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.


    6. புரட்டாசி மாதம் :


    வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.


    7. ஐப்பசி மாதம் :


    வளர்பிறை-துவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.


    8. கார்த்திகை மாதம் :


    இரண்டு சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.


    9. மார்கழி மாதம் :


    வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.


    10. தை மாதம் :


    வளர்பிறை-நந்தி தேவரால் வழிபடப்பட்டது.


    11. மாசி மாதம் :


    தேய்பிறை-தேவர்களால் வழிபடப்பட்டது.


    12. பங்குனி மாதம் :

    .

    வளர்பிறை-குபேரனால் வழிபடப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி